சமய மெய்யியல்

சமய மெய்யியல் அல்லது மத மெய்யியல் என்பது மெய்யியலின் ஒரு பிரிவு. இது சமயம், கடவுளின் இருப்பு, கடவுளின் இயற்கைப் பண்பு, சமய அனுபவத்தின் சோதனை, சமய நூல்கள், சமயச் சொல்லகராதி, அறிவியலுக்கும் சமயத்திற்குமான விடயங்கள் உள்ளிட்டவற்றை கேள்விகளுடன் தொடர்புபடுத்துவதாகும்.[1] இது பண்டைய ஒழுக்க முறையுடன் தொடர்புடையது மட்டுமின்றி மெய்யியலுடனும் தொடர்புடையது ஆகும். இதைப் பற்றிய ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகளில் மெய்யியலுடனான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய மெய்யியல் கிளைகளுடனும், பொதுச் சிந்தனை, வரலாறு, ஏரணம், பெளதீக அதீதவியல் உட்பட்டவற்றுடனும் தொடர்புடையது.[2] சமய மெய்யியல் பிரபலமான புத்தகங்களின் மூலமும் விவாதங்களின் மூலமும் கல்வித்துறைக்கு வெளியே அடிக்கடி பேசப்படுகிறது. குறிப்பாக, இது கடவுளின் இருப்பைப் பற்றியும் தீவினைச் சிக்கலைப் பற்றியதாகவும் அமைகின்றது.

உசாத்துணை

  1. Alston, William P. "Problems of Philosophy of Religion." Encyclopedia of Philosophy. New York: Macmillan Publishing Co., 1967.
  2. Stanford Encyclopedia of Philosophy, "Philosophy of Religion."

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.