மண் பரிசோதனை
விவசாய நிலத்தில் மண் பரிசோதனை (Soil test) செய்யப்படுகிறது. இந்த சோதனையால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் நிலவரம் விவசாயிக்கு தெரியவருகிது. இந்த நிலவரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல பயிரிடுதல் நடக்கிறது.
மண் பரிசோதனை மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு, உரமிடுதல், பயிரிடுதல், நீர்ப் பாசனம் ஆகியவை செய்யப்படுகின்றன.
மண் மாதிரி எடுக்கும் ஆழம்

மண் மாதிரி எடுக்கும் ஆழமானது பயிரிட திட்டமிடும் பயிரின் வகையை பொறுத்து மாறுபடும். வேர் வளர்ச்சியின் தன்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- புல் மற்றும் புல்வெளி - 5 செ .மீ
- நெல், கேழ்வரகு ,கம்பு - 15 செ .மீ
- நிலக்கடலை மற்றும் சல்லிவேர் பயிர்கள் -15 செ .மீ
- பருத்தி, கரும்பு, வாழை மற்றும் காய் கரி பயிர்கள் -22 செ .மீ
- ஆணிவேர் பயிர்கள் (மலைத்தோட்டம் ,பழத்தோட்டம் )-30, 60, 90 செ .மீ ஆழங்களில் 3 மாதிரிகள் எடுக்க வேண்டும்
கால் குறைப்பு (Quartering)
வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 1/2 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.
சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.