மணல் திட்டுகள்

மணல் திட்டுக்கள் மற்றும் நீண்ட மணல் திட்டுக்கள் ( Spits மற்றும் Bards) என்பவை அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று. கடல் அலைகளினாலும் நீரோட்டங்களாலும் அரிக்கப்பட்ட மணல் துகள்கள் கடத்தப்படும் போது ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்படுமாயின் அவ்விடத்திலேயே அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன. இதேபோல மேலும் படியவைத்தல் தொடரும் போது நீண்ட தடுப்பு போலவும் தாவது நாக்கு போன்ற அமைப்பாகவும் கடற்கரையிலிருந்து கடலினை நோக்கி வளர்கின்றன.[1] இது போன்ற அமைப்பு ஆற்று முகத்துவாரத்தில் உருவாகுமேயானால் அது குடா என்று அழைக்கப்படுகிறது.[2]

அமெரிக்க பசிபிக் கடற்கரையில் ஜுவான் டி ஃபூகின் ஜலசந்தியில் உள்ள நீண்ட மணல் திட்டு.

மேற்கோள்கள்

  1. Duane, D.B. and James, W.R., 1980, "Littoral transport in the surf zone elucidated by an Eulerian sediment tracer experiment:" Journal of Sedimentary Petrology. vol. 50, p. 929-942
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 265.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.