மணலிக்கரை

மணலிக்கரை என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இது முன்னாளில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. மணலிக்கரை கிராமம் கோதநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. இது பத்மநாபபுரம் பகுதியின் கீழ் வருகிறது. தற்போது இக்கிராமம் வழிக்கலம்பாடு என்று வருவாய்துறையினரால் அழைக்கப்படுகிறது. இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது இதனை மணலிக்கரை என மலையாளத்தில் அழைத்துள்ளனர். ஆனால் 1956 ல் மாநிலங்கள் மறுசீரமைப்பிற்குப் பிறகு வழிக்கலம்பாடு என்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. இங்கு மலையாளம் பேசும் மக்களே அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள கிருஷ்ண சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீ கைலாசர்கோவில் முட்டக்காடு ஆறாவது சிவாலயமான பன்னிப்பாகம் சிவன் கோவில் ஆகியவை இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை மணலிக்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.    

Pictures of Temple and religious places

References

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.