மசாரு இமோடோ
மசாரு இமோடோ (Masaru Emoto|江本 勝|ஜூலை 22, 1943 – அக்டோபர் 17, 2014}}[1][2] சப்பானில் உள்ள யோக்கோகாமாவில் பிறந்த ஒரு எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது ஆய்வுகளையும், முடிவுகளையும் வைத்து இவர் ஒரு நீர் சார்ந்த அறிவியலாளர் என அறியப்படுகின்றார்.[3] நீர் அறிவியலாளர் எனக் கூறப்படுவதற்குக் காரணம் நீர் மூலக்கூறுகளின் இயல்பை மனித உணர்வுகள் மாற்றும் என்று தனது ஆய்வு முடிவுகள் காட்டுவதாக இவர் கூறியதாகும்.[3]
மசாரு இமோடோ 江本勝 | |
---|---|
பிறப்பு | சூலை 22, 1943 யோகோகாமா, சப்பான் |
கல்வி | யோகோகாமா நகராட்சி பல்கலைக்கழகம், மாற்று மருத்துவத்திற்கான பன்னாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இந்தியா) |
வாழ்க்கைத் துணை | கசுகோ இமோடோ |
பிள்ளைகள் | மூன்று |
இவரது கருத்தாக்கங்கள் சில ஆண்டுகளாக இருந்தாலும், நேர்மறையான எண்ணங்கள், சொற்களுக்கு நீரானது வினையாற்றும் என்றும், நச்சுத்தன்மையான நீரைப் பிரார்த்தனைகள், நல்லெண்ணங்கள், சொற்கள் மூலம் தூய்மையாக்கலாம் என்றும் இவர் கொண்டிருந்த போலி அறிவியல் கருதுகோளைச் சுற்றியே இவரது ஆரம்ப கால ஆய்வுகள் இருந்தன.[4][5] இவரது கருத்தாக்கங்கள் அறிவியலுக்கு உட்பட்டவை அல்ல என்று கூறப்பட்டதுடன், அவை பிழையானவை என நிரூபிக்கப்பட்டு, அவரது ஆய்விற்கான அணுகுமுறைகளில் செயல்முறை, மற்றும் கையாளுதல் தவறுகள் இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது.[6]
வாழ்க்கை வரலாறு
மசாரு இமோடோ சப்பானில் உள்ள யோக்கோகாமாவில் பிறந்தார். இவர் யோக்கோகாமா நகராட்சி பல்கலைக்கழகத்தில் உள்ள மானுடம் மற்றும் அறிவியல் துறையில், பன்னாட்டு உறவுகள் என்பது தொடர்பான பிரிவில் பட்டம் பெற்றவராவார். 1990 ஆம் ஆண்டளவில் நீரைப்பற்றி விபரமாகக் கற்க ஆரம்பித்தார்.[7]
இவர் 1986 ஆம் ஆண்டு டோக்கியோவில் IHM குழுமத்தை நிறுவினார். இவர் அக்டோபர், 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் மாற்று மருத்துவத்திற்கான திறந்த பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[8]. இந்தப் பல்கலைக்கழகமானது தவறான ஒன்றாகக் கருதப்பட்டுப் பின்னர் மூடப்பட்டது.[9][10]
பின்னர், இவருக்கு ஐக்கிய அமெரிக்க மற்றும் காந்த ஒத்ததிர்வு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தில் நுண் கொத்து நீர் கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மீது ஏற்பட்ட தாக்கத்தால் இவரது நீர் மர்மம் கண்டறியும் தேடல் தொடங்கியது.
இவர் பெரிதும் அறியப்பட்டது நீரில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளும் அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட கட்டுரைகளுமே. இவர் உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நீரை கொண்டுவந்து, அதை மெதுவாக உறை நிலைக்கு மாற்றி அதன் தன்மைகளை நுண்ணோக்கியின் மூலம் படம் எடுத்துள்ளார். இவரது ஆய்வில் உறைநிலையில் நீரின் பல விதமான தோற்றங்கள் பெறுகின்றன என்பதே ஆகும். அதிலும் குறிப்பாக நாம் நீரின் மீது செலுத்தும் நல்ல அல்லது தீயச் சிந்தனைகளின் மூலம் அவ்வடிவங்கள் மாறுபடுகின்றன என்று தெரிவித்தார்.
அறிவியல் மதிப்பீடு
ஒரு அறிவியல் ஆய்விற்குத் தேவையான பரிசோதனைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிராமை, அறிவியல் சமூகத்துடன் தனது ஆய்வு அணுகுமுறை தொடர்பான போதியளவு விபரங்களைப் பகிர்ந்து கொள்ளாமை போன்ற காரணங்களால் மசாரு இமோடோ விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.[3] இவர் தனது பரிசோதனையை, பரிசோதனை முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய மனித வழுக்களுக்குட்பட்டும், கையாளுதலில் தவறுகளைக் கொண்டிருந்தும் செய்ததாகக் கூறப்பட்டது.[11] உயிர்வேதியியலாளரும், கோர்க் பல்கலைக் கல்லூரி நிர்வாகியுமான வில்லியம் ரெவில்லி இவரது பரிசோதனை முடிவுகள் உண்மைத்தன்மை அற்றவையெனவும், இவரது ஆராய்ச்சி முடிவுகளுக்கு அறிவியல் வெளியீடுகள் இல்லையென்பதையும், இவ்வகையான ஆராய்ச்சியைச் செய்பவர்கள் இலகுவில் பிரபலமடைந்து விடுவதாகவும் கூறினார்.[3]
மேற்கோள்
- "Dr. Masaru Emoto, 1943–2014". Beyond Words (17 October 2014). மூல முகவரியிலிருந்து 23 September 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 October 2014.
- "Masaru Emoto" (German). Koha Verlag. பார்த்த நாள் 20 October 2014.
- Reville, William (February 17, 2011). "The pseudoscience of creating beautiful (or ugly) water". The Irish Times (Dublin): p. 14. http://search.proquest.com/docview/851900025. பார்த்த நாள்: 2019.03.14.
- Harriet Hall (November 2007). "Masaru Emoto's Wonderful World of Water". Skeptical Inquirer.
- Jill Neimark (September–October 2005). "Messages from water?". Spirituality & Health.
- "The minds boggle". The Guardian. 16 May 2005. http://www.guardian.co.uk/science/2005/may/16/g2.science.
- "Authors: Dr. Masaru Emoto". Beyond Words Publishing. மூல முகவரியிலிருந்து 2013-06-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-01.
- Kiesling, Stephen (May–June 2009). "Latest message from water: Is Dr. Emoto a spiritual Madoff?". Spirituality & Health. Archived from the original on 2014-08-26. https://web.archive.org/web/20140826160731/http://spirituality-health.com/articles/latest-message-water-dr-emoto-spiritual-madoff. பார்த்த நாள்: 2019/03/13.
- "Fake university ‘VC’ targeted only quacks to issue degrees - Times of India".
- Jaisankar, C. (2019-01-11). "Fake varsity sealed after operating for 12 years" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/fake-varsity-sealed-after-operating-for-12-years/article25963820.ece.
- Robert Matthews (scientist) (April 8, 2006). "Water: The quantum elixir". New Scientist (2546). https://www.newscientist.com/article/mg19025461.200-water-the-quantum-elixir.html.