மங்கா

மங்கா (kanji: 漫画; listen ; English: /ˈmɑːŋɡə/ அல்லது /ˈmæŋɡə/) வரைகதை (comics) என்பதன் யப்ப்பானிய சொல்[1]. இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா யப்பானிய உகியொ-இ பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது.[2] ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு யப்ப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] யப்ப்பானில், அனைத்து வயதிநரும் மங்காவைப் படிக்க விரும்புவர். பல வகையிலான படைப்புகளை இந்த ஊடகம் உள்ளடக்கும்: மற்றவைகளின் மத்தியில், அதிரடி சாகசங்கள்,வணிகம் மற்றும் வர்த்தகம், நகைச்சுவை, துப்பறிவு, வரலாற்று நாடகம், திகில், மர்மம், காதல், அறிவியல் புனைகதை, பாலியல், விளையாட்டு மற்றும் தீர்மானமின்மை.[4] [5] பல மங்காக்கள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1950களில் இருந்து, மங்கா யப்பணிய பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

யப்பானிய எழுத்துக்களில் மங்கா


மங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகின்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும்.

ஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை  பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன.

சர்வதேச சந்தைகள்

ஒரு பாரம்பரிய மங்காவின் வாசிப்பு திசையைக்குறிக்கும் படம்

2007 ஆம் ஆண்டுக்குள், சர்வதேச வரைகதை மீதான மங்காவின் செல்வாக்கு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. "செல்வாக்கு" இங்கு யப்பான் வெளியே உள்ள வரைகதை சந்தைகள் மற்றும் சர்வதேச அளவில் வரைகதை கலைஞர்கள் மீது உள்ள அழகியல் பாதிப்புகளை குறிக்கும்.

பாரம்பரியமாக, மங்கா கதைகள் மேல் இருந்து கீழ் மற்றும் வலது இருந்து இடது ஓடுகிறது. சில மொழிபெயர்ப்பு மங்கா வெளியீட்டாளர்கள் இந்த அசல் வடிவமைப்பை வைத்துக்கொள்வர். சில வெளியீட்டாளர்கள் மொழிபெயர்ப்பை அச்சிடுவதற்கு முன் கிடைமட்டமாக பக்கங்களை பிரதிபலிக்கிறார்கள், வாசிப்பு திசையை இன்னும் "மேற்கத்திய" இடதுபுறமாக மாற்றுவதால், வெளிநாட்டு வாசகர்கள் அல்லது பாரம்பரிய காமிக்ஸ்-நுகர்வோர் குழப்பம் அடையாமல் இருப்பர் .

பல்கலைக்கழக கல்வி

2000 ஆம் ஆண்டிலிருந்து, கியோட்டோ சேகா பல்கலைக்கழகத்தில் என்ற யப்பானிய பல்கலைக்கழகத்தில், மங்காவிற்கென படிப்பை வழங்ககியது.[6][7] பின்னர், பல நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை நிறுவின.

ஜப்பானில் ஒரு மங்கா கடை

மேற்கோள்கள்

மேலும் படிக்க

படங்கள்

மங்காவில் உணர்ச்சி வெளிப்பாடுலின் வேறுபாட்டைக்காட்டும் சித்திரம்
மங்காவில் ஒரு கதாபாத்திரத்தின் வடிவம்
ப்ளாக்  கேட்  மங்கா படிக்கும் சிறுவன்
குளிக்கும் காட்சியைச்சித்தரிக்கும் படம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.