மங்களம் பாடுதல்

பாரம்பரிய வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் இறுதியில் வாழ்த்துப்பாடல் இடம்பெறும். இதற்கு 'மங்களம் பாடுதல்' எனப்பெயர்.

தமிழர் கலை வடிவம் - வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முடிவில் பாடப்படும் மங்களம் 'வாழிபாடுதல்' என்றழைக்கப்படும்.

கருநாடக இசை

வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் நிறைவாக கீழ்க்காணும் பாடல் பாடப்படுகிறது.

ப - நீநாமரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ச1 - பவமாநஸுதுடு பட்டு பாதாரவிந்தமுலகு

பிரஹ்லாத பக்தி விஜய கீர்த்தனைகளிலிருந்து, சௌராஷ்டிரம் இராகத்தில் அமைக்கப்பட்ட இந்த உருப்படியின் சரணத்தை முதலில் சௌராஷ்டிரம் இராகத்திலேயே பாடிவிட்டு பிறகு பல்லவியை மத்தியமாவதி இராகத்தில் பாடி முடிப்பர். இந்த உருப்படியில் 6 சரணங்கள் இருக்கிறது.

அர்த்தம்:

  • ச1 - வாயுவின் மைந்தனான அனுமன் தாங்கும் திருவடித்தாமரைகளும்
  • ப - உனது திருநாமத்திற்கும் திருவுருவத்திற்கும் என்றும் ஜய மங்களம்


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! எனத்தொடங்கும் பாரதியாரின் பாடல் ஒரு புகழ்வாய்ந்த வாழ்த்துப்பாடலாகும். தமிழ் மொழியையும் இந்திய நாட்டையும் வாழ்த்தி வணங்கும் விதமாக இப்பாடலை பாடகர்கள் பாடுகின்றனர். தமிழிசையை முதன்மையாகக் கருதி நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில், பெரும்பாலான பாடகர்களால் இப்பாடல் நிறைவாகப் பாடப்படுகிறது.

உசாத்துணை

டி. எஸ். பார்த்தஸாரதி எழுதிய "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.