மகாகாளி ஆறு
காளி கண்டகி ஆறு (Kali Gandak), தெற்கு நேபாளத்தில் இந்த ஆறு பாயும் போது நாராயணி ஆறு என்றும் இந்தியாவில் பாயும் போது இதனை கண்டகி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் துணை ஆறான காளி கண்டகி ஆறு, நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும்.[1] நேபாளத்தின்46,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வேளாண் நிலங்களுக்கு காளி கண்டகி ஆறு நீர் ஆதாரமாக உள்ளது.
காளி கண்டகி ஆறு (कालीगण्डकी नदी) | |
River | |
![]() காளி கண்டகி ஆறு, நேபாளம் | |
நாடுகள் | திபெத் (சீனா), நேபாளம், இந்தியா |
---|---|
நகரங்கள் | லோ மாந்தாங், ஜோசம், பெனி, (தவளகிரி), குசுமா, ரித்தி, தேவகாட், நாராயணன்காட் |
உற்பத்தியாகும் இடம் | நுபின் கொடுமுடி |
- அமைவிடம் | மஸ்டாங் மாவட்டம், நேபாளம் |
- உயர்வு | 6,268 மீ (20,564 அடி) |
- ஆள்கூறு | 29°17′0″N 85°50′5″E |
கழிமுகம் | மாகாளி ஆறு |
- அமைவிடம் | தேவகாட், நேபாளம் |
![]() கங்கை ஆற்றின் துணை ஆறுகளான காக்ரா ஆறு மற்றும் மாகாளி ஆறுகளின் வரைபடம் கங்கை ஆற்றின் துணை ஆறுகளான காக்ரா ஆறு மற்றும் மாகாளி ஆறுகளின் வரைபடம்
|
காளி கண்டகி ஆறு இமயமலையில் 6268 மீட்டர் உயரத்தில் உள்ள திபெத் பகுதியின் நுபின் இமாலய கொடுமுடியில் உற்பத்தியாகி நேபாள நாட்டின் மஸ்டாங் மாவட்டத்தில் முதலில் பாய்கிறது.[2][3]
இந்தியாவில்
நேபாள-இந்திய எல்லையான வடக்கு பிகார் மாநிலத்தின் தென் கிழக்கில், காளி கண்டகி ஆறு, நேபாளத்தின் பஞ்சநாதம் ஆறு மற்றும் சோன்கா ஆறுகளுடன் கலந்து இணைவதால் அவ்விடத்தை திரிவேணி என்பர். இந்தியாவில் காளி கண்டகி ஆறு, கண்டகி ஆறு என்ற பெயருடன் 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து பாட்னா அருகில் கங்கை ஆற்றில் கலக்கிறது. இந்தியாவில் 7620 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலங்களுக்கு காளி கண்டகை ஆறு நீர் வளம் வழங்கிறது.
படக்காட்சியகம்
- நேபாளத்தில் பல்வேறு தட்ப-வெப்ப மண்டலங்களில் வேகமாக கடக்கும் மாகாளி ஆறு
- நேபாளத்தின் தேவதாரு காட்டுப்பகுதியில் பாயும் மாகாளி ஆறு
- இந்தியாவிற்குள் நுழைவதற்கு சற்று முன்னதாக நேபாளத்தின் காக்பெனியில் பாயும் மாகாளி ஆறு
மேற்கோள்கள்
- Negi, Sharad Singh. Himalayan Rivers, Lakes and Glaciers. Google Books. https://books.google.com/books?id=5YtUShKY8zcC&pg=PA112&lpg=PA112&dq=Krishna+Gandaki+River+Himalayan+Glaciers,+lakes+and+rivers&source=bl&ots=_HeiR1txb7&sig=CxVCgH0Csq7gHx4_MlfgmJ5KGy8&hl=en&ei=pyX_S4HDG8O5rAeexYz8Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBoQ6AEwAA#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2010-05-28.
- Upper & Lower Mustang (Map). 1:70000. Nepal Map Publisher Pvt., Ltd., Kathmandu.
- Garzione, Carmala N. (2000), "Predicting paleoelevation of Tibet and the Himalaya from δ18O vs. altitude gradients in meteoric water across the Nepal Himalaya", Earth and Planetary Science Letters 183 (1-2): 215–229, doi:10.1016/S0012-821X(00)00252-1, Bibcode: 2000E&PSL.183..215G (Table 2)