பௌலேங்கெரைட்டு
பௌலேங்கெரைட்டு (Boulangerite) என்பது Pb5Sb4S11 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிமமாகும், இதுவோர் ஈய ஆண்டிமனிசல்பைடு சல்போவுப்புக் கனிமமாகும். பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கனிமவியல் பொறியாளர் சார்லசு பௌலேங்கெர் (1810–1849) நினைவாக இக்கனிமத்திற்கு பௌலேங்கெரைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. உலோகச் சாம்பல் நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகங்களாகவும் [2][3][4], சில நேரங்களில் பிளமோசைட்டு என்று அழைக்கப்படும் மெல்லிய இறகுபோன்ற மென்மையான படிகங்களாகவும் உருவாகின்றன. பௌலேங்கெரைட்டு ஒரு முன்னணி ஈயத் தாதுவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பௌலேங்கெரைட்டு Boulangerite | |
---|---|
![]() பௌலேங்கெரைட்டு, சுண்ணாம்புக்கல் தொகுதியைச் சூழ்ந்துள்ளது | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்புக் கனிமம் |
வேதி வாய்பாடு | Pb5Sb4S11 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு |
மேற்கோள்கள் | [1][2] |
மேற்கோள்கள்
- Harlow, George, Joseph Peters, and Martin Prinz. "Sulfides." Simon & Schuster's Guide to Rocks and Minerals. New York: Simon & Schuster, 1977. Entry 44. Print.
- Mineralienatlas
- http://webmineral.com/data/Boulangerite.shtml Webmineral data
- http://www.mindat.org/min-738.html Mindat
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.