பொபி ஃபாரெல்

ரொபேர்ட்டொ "பொபி" அல்ஃபொன்சோ ஃபாரெல் (அக்டோபர் 6, 1949டிசம்பர் 30, 2010) என்பவர் 1970களில் மிகவும் பிரபலமான பொனி எம். என்ற பாப் இசை மற்றும் திசுக்கோ குழுவின் ஒரு உறுப்பினரும், நடனக்காரரும், பாடகரும் ஆவார்[2]. ஃபாரெல் ஆம்ஸ்டர்டாமில் வசித்து வந்தார்.

பொபி ஃபாரெல்
Bobby Farrell
2006 இல் பொனி எம் உடன் ஃபாரெல்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரொபேர்ட்டொ அல்பொன்சோ ஃபாரெல்[1]
பிறப்புஅக்டோபர் 6, 1949(1949-10-06)
பிறப்பிடம்அருபா, நெதர்லாந்து அண்டிலிசு
இறப்புதிசம்பர் 30, 2010(2010-12-30) (அகவை 61), சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா
இசை வடிவங்கள்பாப் இசை, டிஸ்கோ
தொழில்(கள்)நடனம், கூத்து, கேளிக்கையாளர்
இசைத்துறையில்1975–2010
வெளியீட்டு நிறுவனங்கள்அன்சா ரெக்கோர்ட்ஸ், சொனி-பிம்ஜி
இணைந்த செயற்பாடுகள்பொனி எம்.

இளமைக்காலம்

கரிபியன் நாடான நெதர்லாந்து அண்டிலிசுவில் உள்ள அருபா தீவில் ஃபாரெல் பிறந்தார். தனது 15வது அகவையில் தனது பள்ளிப்படிப்பை முடித்து இரண்டாண்டுகள் மாலுமியாகப் பணியாற்றியபோது பல நாடுகளுக்கும் சென்று சென்று, நோர்வேயில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கிருந்து நெதர்லாந்து சென்று சில காலம் நடனக்காரராகத் தொழிலை ஆரம்பித்து [[பின்னர் அங்கிருந்து செருமனி சென்றார்.

பொனி எம். இசைக்குழுவில்

செருமனியில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொனி எம். என்ற பாப் இசைக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் "டாடி கூல்" என்ற தனது முதலாவது பாடல் மூலம் பொனி எம். குழு புகழ் பெற்றது. அதே ஆண்டு "றிவர்ஸ் ஒஃப் பாபிலோன்" என்ற பாடலுடன் சேர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவில் மட்டும் 2 மில்லியன் இசைத்தட்டுகள் விற்கப்பட்டன.

1986 ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து[3], ஃபாரெல் தனியே வெறு மூன்று பெண் பாடகர்களுடன் இணைந்து "Bobby Farrell of Boney M." என்ற பெயரில் தனது இசைப்பயணத்தை மேற்கொண்டார்.

மறைவு

பொபி ஃபாரெல் 2010, டிசம்பர் 30 இல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள ஒரு விடுதியில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள் ஒரு நடன விழாவில் தனது குழுவுடன் கலந்து கொண்டார். இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை[4][5]. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. Albums by Bobby Farrell - Rate Your Music
  2. "Boney M singer Bobby Farrell dies at 61". த கார்டியன். 30 December 2010. http://www.guardian.co.uk/music/2010/dec/30/bobby-farrell-boney-m-singer-dies. பார்த்த நாள்: 30 டிசம்பர் 2010.
  3. "Whatever happened to Boney M?". பார்த்த நாள் 30 December 2010.
  4. "Bobby Farell (61) overleden". பார்த்த நாள் 30 December 2010.
  5. "Boney M's Bobby Farrell has died, aged 61". பார்த்த நாள் 30 December 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.