பொன்வார் மாடு

பொன்வார் மாடு (Ponwar) என்பது இந்தியாவின் ஒரு நாட்டு மாட்டு இனமாகும். [1] இந்த மாடுகள் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தின் புரான்பூர் வட்டம் பொன்வர் பகுதியில் தோன்றியது என அறியப்படுகிறது. இதனால் இந்த இனம் அதே இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. [2] இந்தக் கால்நடைகள் சிறிய புவியியல் பகுதியில் வாழ்கின்றன. [3] இந்த மாடுகள் மிகவும் கடினமாக வேலை செய்யக்கூடியனாவாக உள்ளன. இவை கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்கள் கலந்து காணப்படுகின்றன. இந்த மாடுகள் விவசாயப் பணிகள் மற்றும் முதன்மையாக வண்டி இழுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[4]

பொன்வர் காளை
பொன்வர் பசு

மேற்கோள்கள்

  1. "Morphometric characteristics and present status of Ponwar cattle breed in India". National Bureau of Animal Genetic Resources. Food and Agricultural Organization. பார்த்த நாள் 18 May 2015.
  2. "Ponwar cattle". Uttar Pradesh State Biodiversity Board. பார்த்த நாள் 18 May 2015.
  3. "Keeping Unique Cattle Breeds Alive". New Indian Express. பார்த்த நாள் 18 May 2015.
  4. "Breeds of Livestock - Ponwar Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்த்த நாள் 18 May 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.