பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு)
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் ஒரு பள்ளி ஆகும். இப்பள்ளியின் அதிகாரப்பூர்வ தொடர்பு மொழி தமிழ் மொழி. இப்பள்ளி மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு 7 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட தமிழ் மாணவர்கள் பயில்கிறார்கள். மலேசிய அரசாங்கத்தால் நிலைசார் உதவி தமிழ்ப்பள்ளியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.[1][2]
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
பைராம், நிபோங் தெபால் பினாங்கு மலேசியா | |
தகவல் | |
வகை | தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி |
குறிக்கோள் | அறிவே எல்லாம் |
தொடக்கம் | ஏப்ரல் 22, 1905 |
திறப்பு | 1905 |
பள்ளி மாவட்டம் | நிபோங் தெபால் |
அதிபர் | திரு. நாகேசுவரன் |
தரங்கள் | பி |
மொத்த சேர்க்கை | 33 மாணவர்கள், 7 ஆசிரியர்கள் |
இணையம் | https://www.facebook.com/groups/1506544959590116/ |
வரலாறு

இப்பள்ளி 1905-ஆம் ஆண்டு மலாயாவில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. பைராம் மீள்ம மரத் தோட்டத்தில் பணியாற்றிய தமிழர் பிள்ளைகளின் நலன் கருதி அப்போது இருந்த தோட்ட உரிமையாளரும் அவருடைய இணை உரிமையாளர் பிரான்சிசு எட்வட்டு மகுரே என்பவர்கள் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியை அமைத்தனர்.
தொடக்கக்காலத்தில் இப்பள்ளிக்கூடம் வெறுமையாக இருந்த தோட்டப் பணியாளர்கள் மாளிகையில் செயல்பட்டது. 1959-ஆம் ஆண்டு பைராம் தோட்ட நிலங்கள் பல பகுதிகள் தோட்ட உரிமையாளர்களால் விற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி நிலமும் சுற்றியுள்ள நிலமும் மோ லியோங் உங் என்ற சீன வணிகரால் வாங்கப்பட்டது.சில காலங்கள் கழிந்து சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் மீண்டும் பள்ளி அறங்காவலர் குழு தலைமையில் பள்ளிக்காகவே மோ லியோங் உங் இலவயமாக வழங்கினார்.
1992-ஆம் ஆண்டு பழைமையான தோட்ட பணியாளர் மாளிகையை உடைத்து அரசாங்கத்தால் அதே நிலத்தில் புதிய இரண்டு கட்டடங்கள் பள்ளிக்காக கட்டப்பட்டன.
சாதனை
பினாங்கு மாநிலத்திலே முதல் முறையாக அரசாங்க யூ.பி.எசார் எனும் தேர்வில் 7எ(A) பெற்ற மாணவர் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றுக் குறிப்பு.இப்பள்ளி மாணவர்கள் 2012,2013,2014,2015 ஆண்டுகளிள் மாநில அளவில் நடைபெற்ற திடல் தடப் போட்டிகளில் பங்கு பெற்று பல முறை தங்கம் வெள்ளி பதங்களைப் பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்
- (in மலாய்). http://buletinkpm.blogspot.com/2012_04_01_archive.html.
- (in தமிழ்). http://www.tamilschool.org/MainPage.aspx.