எண்ணுண்மி

எண்ணுண்மி அல்லது பைட்டு அல்லது பைட் அல்லது பைற் (Byte) என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும். கணனியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணனி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலகாக இது பயன்பட்டு வருகிறது.

பைட்டு ஆனது எப்பொதுமே கணனி வன்பொருளின் மீது தங்கி உள்ளது, இதற்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஒர் அளவு இல்லை. பயன்பாட்டுக்கு இலகுவாக 8 பிட்டுக்களை ஒரு பைட்டு ஆக கொளவதனால், இரண்டின் அடுக்குகளான 0 இலிருந்து 255 வரை பைட்டக கொள்ளக்கூடியதாக உள்ளது. நுண்செயலக வடிவமைப்பளர்கள் பைட்டிலுள்ள பிட்டுக்களின் எண்ணிக்கையை தத்தமது கணனி கட்டுமானத்திற்கேற்ப வடிவமைத்து வந்தாலும் பெரும்பாலான பிரபல்யமான கணனி கட்டுமானங்கள் 8 பிட்டுக்களையே பைட்டுக்களாக பாவித்து வருகின்றனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.