பேர்ணாடெற்றே பீட்டர்சு

பேர்ணாடெற்றே பீட்டர்சு (பிறப்பு: பேர்ணாடெற்றே லசாரா; பெப்ரவரி 28, 1948), ஓர் அமெரிக்க நடிகை, பாடகி மற்றும் சிறுவர் கதை எழுத்தாளர் ஆவார். ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது கலை வாழ்வில் இசை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும், தனிநபர் அளிக்கைகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். இவர் ஒரு மிகப்பிரபலமான பிராடுவே அரங்கு அளிக்கையாளர் ஆவர்.

பேர்ணாடெற்றே பீட்டர்சு
பிறப்புபேர்ணாடெற்றே லசாரா
பெப்ரவரி 28, 1948 (1948-02-28)
ஒசோன் பூங்கா, குவீன்சு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, பாடகி, படைப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1958–நடப்பு
வாழ்க்கைத்
துணை
மைக்கேல் விட்டன்பேர்க்
(தி. 19962005) «start: (1996)end+1: (2006)»"Marriage: மைக்கேல் விட்டன்பேர்க்
to பேர்ணாடெற்றே பீட்டர்சு
"
Location:
(linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81)
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1960களில் பதின்ம வயது நடிகையானார். 1970களில் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் தோன்றினார். 'த மப்பெட் ஷோ', 'த கரோல் பேர்னெட் ஷோ' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் 'சைலன்ட் மூவி', 'த ஜேர்க்', 'பென்னீஸ் ஃபுரொம் ஹெவன்', 'அன்னீ' போன்ற திரைப்படங்களிலும் நடித்த இவரது பாத்திரங்கள் பெரும் பாராட்டைப் பெற்றன. 1980களில் மீண்டும் அரங்குகளில் அளிக்கைகள் செய்ய ஆரம்பித்த இவர் அடுத்த மூன்று தசாப்தங்களாக பிரபல பிராடுவே அரங்க நட்சத்திரமாகத் திகழ்ந்தார். 2010களில் 'ஸ்மாஷ்' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் 'மொசாட் இன் த ஜங்கிள்' என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் எம்மி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றுக்கு மூன்று முறை நியமிக்கப்பட்டு ஒருமுறை விருது பெற்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

பேர்ணாடெற்றே பீட்டர்சு, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள குயின்சு மாவட்டத்தில் ஓசோன் பூங்கா என்னும் பிரதேசத்தில் சிசிலிய அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோருக்கு மூன்று பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை ஆவார்.[1] இவரது தந்தையார் பீட்டர் லசாரா, வெதுப்பி கொண்டு செல்லும் வண்டி ஓட்டுநனராக இருந்தார். இவரது தாயார் மார்கிரைட், இவருக்கு மூன்றரை வயதாக இருந்த போது 'ஜுவனைல் ஜூரி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்ற வைத்தார். மேலும், தனது ஐந்தாவது வயதில் 'நேம் த டியூன்', 'த ஹோன் அன்ட் ஹாடார்ட் சில்ட்ரென் அவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார்.[2]

திரைப்படங்கள்

இவர் 1973 முதல் 33 திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 1981இல் இவர் நடித்த 'பென்னீஸ் ஒவ் ஹெவன்' திரைப்படத்திற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார். 2003 இல் வெளியான 'இற் ரண்ஸ் இன் த ஃபமிலி' என்ற 'கேர்க் டக்லஸ்' குடும்பத்தினரின் மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த திரைப்படத்தில், இவர் மைக்கேல் டக்லசினது மனைவியாக நடித்தார்.

அரங்க அளிக்கைகள்

1982இல் 8 ஆண்டுகள் இடைவெளியின் பின், மன்ஹாட்டன் அரங்கக் கழகத் தயாரிப்பான 'சலி அன்ட் மார்ஷா' என்ற நகைச்சுவை நாடகத்தில் தோன்றியதன் மூலம் நியூயோர்க் நகர அரங்க அளிக்கைகளுக்குத் திரும்பினார். இதற்காக அவர் நாடக மேசை விருதுக்கு நியமிக்கப்பட்டார். 2003 இல் பிராடுவேயின் 'ஜிப்சி' இசை நிகழ்ச்சியில் மமா ரோஸ் என்ற பாத்திரத்தில் பங்கேற்றார். 2017 இல் பிராடுவேயைன் இசை நிகழ்ச்சியான 'ஹலோ, டோலி'யில் பிரதான பாத்திரத்தில் தோன்றினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

இவர் சொனி அன்ட் சேர், ஜோர்ஜ் பேர்ண்ஸ் போன்ற பிரபலங்களுடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 'த மொப்பெட் ஷோ', 'அல்லி மக்பீல்' ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று எம்மி விருதுக்கு நியமிக்கப்பட்டார். 1976, 1981, 1983, 1987, 1994 ஆகிய ஆண்டுகளில் அகாதமி விருது வழங்கும் நிகழ்வுகளில் தொகுப்பாளினியாகவும் அரங்க அளிக்கையிலும் பங்கேற்றார்.

சிறுவர் நூல்கள்

'பிராடிவே பார்க்ஸ்' என்ற மிருகப் பாதுகாப்பு மையத்திற்கான நிதிக்காக, இவர் மூன்று சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். [3]

மேற்கோள்கள்

  1. Okamoto, Sandra. "Broadway star and Tony award winner Bernadette Peters comes to the RiverCenter Saturday", Ledger-Enquirer (Columbus, Georgia), September 27, 2012
  2. Speace, Geri. "Bernadette Peters Biography", MusicianGuide.com, accessed February 10, 2009
  3. Gans, Andrew. "Dog Has Identity Crisis In New Bernadette Peters Book, Due in May", Playbill, March 19, 2019, accessed November 22, 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.