பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்

பெரும்பிடுகு முத்தரையர் II (கி.பி. 705 AD-745) மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அழைக்கப்படுபவர், முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த தஞ்சாவூரை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.[1] இவரை தஞ்சை கோ என்று அழைத்தனர். தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றை இவர் ஆட்சி செய்தார். நந்திவர்மன் II இன் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், திருச்சி நகரில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. பிறகு 2002 ஆம் ஆண்டிலிருந்து இவரது பிறந்தநாள் (சதய) விழாவாக கொண்டாடபடுகிறது.

பெரும்பிடுகு முத்தரையர் II
ஆட்சிக்காலம் அண்.705 – அண்.745 CE
முன்னையவர் மாறன் பரமேசுவரன்
பின்னையவர் சாத்தன் மாறன்
இயற்பெயர்
சுவரன் மாறன்
தந்தை இளங்கோவதிரையர்
மரபு முத்தரையர் வம்சம்
பிறப்பு 23 மே 675 CE
இறப்பு 745
சமயம் இந்து

வாழ்க்கை

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மே 23 கி.பி.675 பிறந்தார்.[2] இவரது தந்தை இளங்கோவதிராயர், மாறன் பரமேசுவரன் என்று பெயரிட்டார். 705 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். இவர் 12 போர்களில் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் இவர் நந்திவர்மா பல்லவன் உடன் தோழமையாக இருந்தார். லெமூரியா என்று அழைக்கப்பட்ட குமரிகண்டதில் எழுதப்பட்ட நாலடியார் நூலில், இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த முத்தரையர் மரபு சார்ந்த வம்சாவழிகள் வளரி எனப்படும் ஆயுதத்தை கையாள்வதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் இதை குறிப்பதற்காக வளரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது காலப்போக்கில் வளையர்கள் என்று திரித்து போனது.

போரில் எதிரிகளை வென்ற இடங்கள் பன்னிரண்டு

  1. கொடும்பாளுர்
  2. மணலூர்
  3. திங்களூர்
  4. காந்தலூர்
  5. அழுந்தியூர்
  6. காரை
  7. மரங்கூர்
  8. புகழி
  9. அண்ணல்வாயில்
  10. செம்பொன்மாரி
  11. வெண்கோடல்
  12. கண்ணனூர்

ஆதாரங்கள்

  1. Subramania, T. S. (2 July 2010). "Chola Splendour". Frontline 27 (13). http://www.frontline.in/static/html/fl2713/stories/20100702271312300.htm. பார்த்த நாள்: 2017-01-26.
  2. Hindu, The. "King Mutharaiyar remembered". hindu (Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/King-Mutharaiyar-remembered/article14768038.ece. பார்த்த நாள்: 2 April 2017.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.