பேகாட் (திரைப்படம்)

பேகாட் எனும் பாரசீக மொழித் திரைப்படம் ஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கிய திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பாய்காட் (ஆங்கிலம்: Boycott) எனும் பெயரில் வெளியானது. ஈரானின் மற்றுமொரு புகழ் பெற்ற இயக்குனர் மசித் மசிதி இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது.

பேகோட்
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
நடிப்புமசித் மசிதி
வெளியீடு1985
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

கதை

இத்திரைப்படமானது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞனைப் பற்றியது. இத்திரைபடம் மோசன் மல்மாக்பஃப்-ன் வாழ்க்கையின் ஒரு பகுதி என பரவலாக நம்பப்படுகிறது.

நடிகர்கள்

  • முகம்மது காஸேபி (Mohammad Kasebi)
  • மசித் மசிதி (Majid Majidi)
  • எஸ்மாத் மக்மால்பஃப் (Esmat Makhmalbaf)
  • ஸோக்ரே ஸார்மாடி (Zohreh Sarmadi)
  • அர்டலான் ஷோஜா- காவே (Ardalan Shoja-Kaveh)
  • எஸ்மாயில் சால்டனியன் (Esmail Soltanian )

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.