பெல்வர் கோட்டை

பெல்வர் கோட்டை[2] (காட்டலான்: Castell de Bellver) என்பது கோதிக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி பால்மா தே மல்லோர்க்காவுக்கு வட மேற்கே உள்ள தீவான மயோர்க்கா, பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும். இது பதினான்காம் நூற்றாண்டில் மஜோர்க்காவின் இரண்டாம் ஜெம்சுக்காக அமைக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருக்கும் சில வட்ட வடிவமான கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.[3] 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20 நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான காலத்தில் இது ஒரு இராணுவ தடுப்பு முகாமாகவும் சிறையாகவும் செயற்பட்டது. தற்காலத்தில் மக்களே இதைப் பராமரிக்கின்றனர். இத்தீவின் பிரதான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருப்பதுடன் நகரத்தின் வரலாற்று அருங்காட்சியகமாகவும் செயற்படுகிறது.[4]

பெல்வர் கோட்டை
கோட்டையின் வெளித் தோற்றம்
அமைவிடம்பால்மா தே மல்லோர்க்கா, எசுப்பானியா
ஆள்கூற்றுகள்39.56375°N 2.619338°E / 39.56375; 2.619338
உயரம்112 மீட்டர்
கட்டப்பட்டது1311
Spanish Property of Cultural Interest
அதிகாரப்பூர்வ பெயர்: Castillo Bellver
வகைநகர்த்த முடியாதது
தேர்வளவைநினைவுச்சின்னம்
அளிக்கப்பட்டதுஜூன் 3, 1931[1]
மேற்கோள் எண்RI-51-0000411

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.