பெர்னாடினோ தெலெசியோ

பெர்னாடினோ தெலெசியோ (Bernardino Telesio, 1509 – 2 அக்டோபர் 1588) ஒரு இத்தாலிய மெய்யியலாளரும், இயற்கை அறிவியலாளரும் ஆவார். அவரது இயற்கைக் கோட்பாடுகள் பின்னர் பிழை என நிரூபிக்கப்பட்டாலும், கவனிப்புக்கு அவர் கொடுத்த அழுத்தம், அவரை அறிவியல் வழிமுறையை உருவாக்கிய நவீன அறிவியலாளர்களுள் அவரை முதல்வர் ஆக்கியது.

பெர்னாடினோ தெலெசியோ

வரலாறு

இவர் தெற்கு இத்தாலியின் கலபிரியா நகரில் உள்ள கொசென்சா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர் முதலில், மிலானில், அறிஞரும் புகழ் பெற்ற கவிஞருமான இவரது தந்தையின் சகோதரரிடம் கல்வி பயின்றார். பின்னர் உரோமிலும், படுவாவிலும் கல்வியைத் தொடர்ந்தார். இவரது கல்வி, மறுமலர்ச்சிக் கால அறிஞர்களுக்குரிய பாடத்திட்டத்துக்கு அமைவாகச் செந்நெறியியல், அறிவியல், மெய்யியல் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. இவ்வாறு தான் பெற்ற அறிவை அடிப்படையாகக் கொண்டு அக்காலத்தில் பெயர் பெற்று விளங்கிய மத்தியகால அரிசுட்டாட்டிலியத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தார்

உசாத்துணைகள்

  • Neil C. Van Deusen, Telesio: First of the Moderns (New York, 1932)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.