பெரோஸ் கான்
ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6]
பெரோஸ் கான் | ||||||
---|---|---|---|---|---|---|
பிறப்பு | செப்டம்பர் 25, 1939 பெங்களூர், கர்நாடகா, இந்தியா | |||||
இறப்பு | ஏப்ரல் 27, 2009 69) பெங்களூர், கர்நாடகா, இந்தியா | (அகவை|||||
தொழில் | Actor, திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் | |||||
நடிப்புக் காலம் | 1960-2007 | |||||
துணைவர் | சுந்தரி (1965-1985) | |||||
பிள்ளைகள் | பர்தீன் கான் | |||||
|
1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
ஃபெரோஸ் கான் இந்தியாவின் பெங்களூரில் ஷியா இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை சாடிக் அலி கான் தனொலி ஆப்கானிஸ்தானின்[4][5][6] காசணி மாகாணத்தை சேர்ந்த ஒரு ஆப்கானியர் ஆவார். அவர் தாயார் பாத்திமா ஈரானைச் சேர்ந்தவரவார். இவர் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி மற்றும் புனித கேர்மைன் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் படித்தார். சஞ்சய் கான், ஷாரூக் கான் (தொழிலதிபர்), சமீர் கான் மற்றும் அக்பர் கான் (இயக்குனர்) இவருடைய சகோதரர்கள் ஆவர். இவருக்கு தில்ஷாத் பிபி என்ற சகோதரி இருந்தார். பெங்களூரில் பள்ளி பருவம் முடிந்த பின் 1960 இல் மும்பை வந்த இவர் டிடி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் முதல் முறையாக தோன்றினார்.
தொழில் வாழ்க்கை
அடுத்த 5 வருடங்கள். இரண்டாம் தர வேடங்களில் நடிக்க நேர்ந்தது. 1960கள் மற்றும் 1970களின் தொடர்ந்த காலங்களில், குறைந்த பட்ஜெட் படங்களை பிரபலம் இல்லாத நடிகைகளை வைத்து தயாரித்தார். 1962 இல் டார்சன் கோஸ் டு இந்தியா என்ற ஆங்கில பெயரிடப்பட்ட படம் ஒன்றில் சிமி கறேவாளுடன் தோன்றினார். 1965இல் வெளி வந்த ப்ஹனி மஜும்தரின் ஊன்சே லோக் அவருடைய முதல் வெற்றி படமாக அமைந்தது.அதில் ராஜ் குமார் மற்றும் அசோக் குமார் போன்ற பிரபல நடிகர்களுக்கு எதிராக அவருடைய நடிப்பு கவனிக்கப்பட்டதாக அமைந்தது.[7] அதே வருடம் ஆர்சோ என்ற படத்தில் சாதநாவுடன் ஒரு தியாகம் செய்யும் காதலர் வேடத்தில் நடித்தார். இதன் மூலம் முதல் தர இரண்டாம் நிலை வேடங்களில்நடிக்கும் நடிகரானார். ஆத்மி அவுர் இன்சான் (1969) என்ற படம் மூலம் பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார். தனது சகோதரர் சஞ்சய் கானுடன் சேர்ந்து உபாசனா ,(1967) மேலா (1971) மற்றும் நகின் (1976) போன்ற வெற்றிப் படங்களில் தோன்றினார்.
திரைப்பட துறையில் சிறந்து விளங்க 1971 ஆம் ஆண்டு ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக மாறினார். அபராத் என்ற திரைபடத்தை அவர் முதல்முறையாக இயக்கினார். ஜெர்மனியில் நடக்கும் கார் பந்தயம் காண்பிக்கப்படும் முதல் இந்திய படமாக அது அமைந்தது. அதில் மும்தாஸ் கதாநாயகியாக நடித்தார். 1975ஆம் ஆண்டு தர்மாத்மா என்ற திரைபடத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக அது அமைந்தது. மேலும் அவர் நடித்து, இயக்கி மற்றும் தயாரித்த முதல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகை ஹேமா மாலினி அப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான வேடத்தில் தோன்றினார்.[8] ஹாலிவுட் திரைப்படம் காட்பாதரை மனதில் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
1970களிலும், 1980களிலும் அவர் பாலிவூடின் முன்னணி நட்சத்திரமாக பல படங்களை இயக்கியும், நடித்தும் திகழ்ந்தார். பகத் தன்ன சாட் (1974) என்ற பஞ்சாபி திரைப்படத்திலும் அவர் நடித்தார். ஜீனத் அமன் உடன் நடித்து 1980இல் வெளி வந்த குர்பானி திரைப்படம் அவருடைய சினிமா வாழ்கையின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்திரைப்படம் பாகிஸ்தான் பாப் பாடகி நசியா ஹசனுக்கு பின்னணி பாடும் துறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவருடைய ஆப் சைசா கோயி[7] என்ற பாடல் மிக பிரபலமானது. 1986இல் ஜான்பாஸ் என்ற மிக பெரிய வெற்றி படத்தை அவர் நடித்து இயக்கினார். சிறந்த நடிகர் குழுவை கொண்ட அப்படம் அவருடைய ஒரு மிகச் சிறந்த படமாக அமைந்தது .[9] அப்படம் சிறந்த பாடல்களையும், சிறந்த ஒளிபதிவையும் கொண்டிருந்தது. 1988ஆம் ஆண்டு அவர் தயாவான் என்ற படத்தை இயக்கி நடித்தார். தென்னிந்திய திரைப்படமான நாயகனின்மறு தயாரிப்பாக அது இருந்தது. யால்கார் (1992) என்ற படத்தை இயக்கி நடித்த பின், நடிப்பிலிருந்து 11 ஆண்டுகள் நீண்ட ஓய்வு எடுத்துகொண்டார்.
அவரின் மகன் ஃபார்டீன் கானின் சினிமா வாழ்க்கை பிரவேசம் 1998இல் வெளியான பிரேம் அக்கன் என்ற தோல்வி படம் மூலம் நிகழ்ந்தது. 2003 இல் வெளியான ஜனஷீன் படத்தை தயாரித்து இயக்கியதின் மூலம் அவர் திரை உலகத்தில் மறுபடியும் பிரவேசித்தார். அப்படத்தில் அவருடைய மகன் ஃபார்டீனும் நடித்தார். அவருடைய படங்களில் எப்போதும் விலங்குகளை நடிக்க வைத்தார். ஜனஷீன் படத்தில் ஒரு சிம்பன்சி மற்றும் சிங்கம் நடிக்க வைக்கப்பட்டது. ஆனால் பீபில் பார் அனிமல்ஸ் ஹரியானா இயக்கத்தின் தலைவர் நரேஷ் கட்யன் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகருக்கு எதிராக பாரிடபாத் நீதி மன்றத்தில் விலங்குகளுக்கு எதிராக கொடுமை புரிந்ததாக வழக்கு தொடர்ந்தார். அவருடைய மகனுடன் ஏக் கிலாடி ஏக் ஹசினா (2005) என்ற படத்தில் தோன்றிய இவரின் கடைசி படம் வெல்கம் (2007) என்ற திரைபடமாகும்.
ஃபெரோஸ் கான் தன்னுடைய ஒப்புயர்வற்ற பாணியால் அவர் காலத்தில் மற்ற அனைவரையும்விட முன்னிலை வகித்தார். அது அவருடைய திரைப்படங்களிலும், பாடல்களிலும் பிரதிபலித்தது. அவருடைய குர்பானி, தர்மாத்மா போன்ற ஹிந்தி திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும். அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக கருதப்படாவிட்டாலும் பல வருடங்கள் அவர் புகழ் பெற்று சிரஞ்சீவியாக விளங்கினார்.
2006 ஆம் ஆண்டு மே மாதம், ஃபெரோஸ் கான் தனது சகோதரரின் திரைப்படமான தாஜ் மஹால் படத்தை ஆதரிக்க வேண்டி பாகிஸ்தான் சென்றார். அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப் அவரை இருட்டடிப்பு செய்தார். அங்கு சென்றபோது அவர் குடித்துவிட்டு பாகிஸ்தான் பாடகர் மற்றும் செய்தியாளர் பாக்ஹ்ர்-ஏ-ஆழம் என்பவரை அவமதித்தார் மற்றும் பாகிஸ்தானை பற்றி அவதுறாக பேசினார் என்று பாகிஸ்தான் உளவு துறை முஷாரப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அத்தகவல் கீழ்க்கண்டாவாறு இருந்தது :
"நான் ஒரு கர்வமுள்ள இந்தியன். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. பாகிஸ்தான் போல் இல்லாமல் இங்குள்ள இஸ்லாமியர்கள் முன்னேற்றம் அடைந்து கொண்டிருகிறார்கள். நமது ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர் மற்றும் நமது பிரதமர் ஒரு சீக்கியர் ஆவார். பாகிஸ்தான் இஸ்லாமின் பேரில் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு "இஸ்லாமியர்களே மற்ற இஸ்லாமியர்களைக் கொல்வதைப் பார்க்க முடியும்"
இவை அனைத்தையும் ஃபெரோஸ் கான் மறுதினம் மறுத்தார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷன், வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அவருக்கு எதிர்காலத்தில் விசா அளிக்க மறுத்தது.[10]
சொந்த வாழ்க்கை
பெரோஸ் கானுக்கு ஃபார்டீன் கான் என்ற மகன் இருந்தார், இவர் பாலிவுட்டின் முன்னாள் நடிகையான மும்தாஸ் அவர்களின் மகள் நடாஷா கான்யை மணந்துள்ளார். இவருக்கு லைலா கான் என்ற மகள் இருக்கிறாள், இவர் ஃபார்ஹான் ஃபர்னிச்சர்வாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். லைலா, ரோஹித் ராஜ்பால் என்ற தேசிய நிலை டென்னிஸ் விளையாட்டு வீரரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார். பின்னர் 2010 -இல் ஃபர்னிச்சர்வாலாவை மணந்து கொண்டார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
- பிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது:டிடி (1960)
- பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகர் விருது ஆத்மி அவுர் இன்சான்(1970)
- பிலிம்ஃபேர்சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரை இன்டர்நேஷனல் க்றுக்(1974)
- பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2001
- பிலிம்ஃபேர்சிறந்த வில்லன் பரிந்துரை ஜனஷீன் திரைப்படம்,(2003)[11]
- ஜீ சினி விருது வாழ்நாள் சாதனையாளர்,2008
- 'தொழிலின் பெருமை' என்ற மாக்ஸ் ஸ்டார்டஸ்ட் விருது,2009[12][13]
பட பட்டியல்
- டிடி (1960)
- மெயின் சாதி கரனே சலா (1962)
- டார்சன் கோஸ் டு இந்தியா (1962) ... பிரின்ஸ் ரகு குமார்
- பஹுராணி (1963) ... விக்ரம்
- சுஹாகண் (1964) ... ஷங்கர்
- சார் தேர்வேஷ் (1964) ... கமர் பக்த்
- தீஸ்ரா கவுன் (1965)
- ஊன்சே லோக் (1965) ... ரஜினிகாந்த்
- ஏக் சபேரா ஏக் லூதெரா (1965) ... மோகன்/விஜய் பிரதாப் சிங்
- ஆர்ஷூ (1965) ... ரமேஷ்
- தஸ்வீர் (1966)
- மெயின் வோஹி ஹூன் (1966) ... விஜய்
- ஒஹ் கோயி அவுர் ஹோகா (1967)
- ராத் அவுர் தின் (1967) ... திலிப்
- சி ஐ டி 909 (1967)
- அவுரத் (1967)
- ஆக் (1967) ... ஷன்கர்
- ப்யாசி சாம் (1969) ... அசோக்
- ஆத்மி அவுர் இன்சான் (1969) ... ஜெய் கிஷன் ஜே கே
- சபார் (1970) ... சேகர் கபூர்
- மேலா (1971)
- ஏக் பஹேலி (1971) ... சுதிர்
- உபாசனா (1971)
- அபராத் (1972) ... ராம் கானா
- கஷ்மகாஷ் (1973)
- கிஸான் அவுர் பகவான் (1974)
- கஹஹோட்டே சிக்கி (1974) ... குதிரை ஓட்டி
- கீதா மேரா நாம் (1974)
- பகத் தன்ன சாட் (1974) ... ராமு
- அஞ்சான் ராஹேன் (1974) ... ஆனந்த்
- இன்டர்நேஷனல் க்ரூக் (1974) ... SP ராஜேஷ்
- ராணி அவுர் லல்பரி (1975) ... குலிவேர்
- கால சோனா (1975) ... ராகேஷ்
- ஆ ஜா சனம் (1975) ... Dr. சதீஸ்
- தர்மாத்மா (1975) .... ரன்பீர்
- ஷராபாத் சோத் டி மைனே (1976)
- கபிலா (1976)
- நகின் (1976) ... ராஜ்
- ஜாது தோனா (1977) ... Dr. கைலாஷ்
- தரிந்தா (1977)
- சுனொதி (1980)
- குர்பானி (1980) ... ராஜேஷ் குமார் / கைலாஷ் நாத்
- ' க்ஹூன் அவுர் பாணி /0} (1981)
- கச்சே ஹீரே (1982) ... கமல் சிங்க்கின் மருமகன்
- ஜான்பாஸ் (1986) ... இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சிங்
- தயாவான் (1988) ... ஷங்கர் வாக்மரே
- மீட் மேரே மன் கா (1991)
- யால்கார் (1992) ... ராஜேஷ் அஷ்வினி குமார்
- பிரேம் ஆகன் (1998) ...
- ' ஜனஷீன்(/0} (2003) ... சபா கரீம் ஷா
- சித்தப்பா (2005) ... ராமன்
- ஏக் கிலாடி ஏக் ஹசீனா (2005) ... ஜெஹன்கிர் கான் (சிறப்பு தோற்றம்)
- ஓம் சாந்தி ஓம் (2007) ... அவராக (சிறப்பு தோற்றம்)
- வெல்கம் (2007) ... ரன்பீர் தன்ராஜ் சட்டா (RDX)
இறப்பு மற்றும் இறுதி ஊர்வலம்
2009 ஏப்ரல் மாதம் புற்றுநோய்க்கு அவர் பலியானார். அவர் நோய்வாய்பட்டிருந்தபோது பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு திருமபினார்.
அவர் மிக விரும்பிய பெங்களூர், ஓசூர் ரோடு, ஷியா கபரிஸ்தானில் தனது தாயாரின் சமாதி அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திரை உலகின் பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிஜ வாழ்க்கையை விட பெரிதான அவரது வாழ்க்கை முறைக்காகவும் மற்றும் சினிமாவில் அவரது திறமைக்காகவும் அவர் நினைவுகொள்ளபட்டார்.[2][22]
குறிப்புகள்
- 'ஃபெரோஸ் கான் இந்திய நாகரிக சின்னம்' R G விஜயசாரதி, பெங்களூர், Rediff.com, 27 ஏப்ரல் 2009.
- பாலிவூட் நடிகர் ஃபெரோஸ் கான் இறந்தார் பிபிசி நியூஸ் திங்கள், 27 ஏப்ரல் 2009
- பாலிவூடின் நாகரிக சின்னம் ஃபெரோஸ் கான் இறந்தார் தி ஏகனொமிக் டைம்ஸ் 27 ஏப்ரல் 2009
- 'பாலிவூடின் கிளின்ட் ஈஸ்த்வூத்' ஃபெரோஸ் கான் இறந்தார்
- பாலிவூடின் ஃபெரோஸ் கான் 69வது வயதில் இறந்தார்.
- 'பாலிவூடின் கிளின்ட் ஈஸ்த்வூத்' ஃபெரோஸ் கான் 69வது வயதில் இறந்தார்.
- ஃபெரோஸ் கான் ராஜா வாழ்க்கை வாழ்ந்தார். டைம்ஸ் ஆப் இந்தியாஏப்ரல் 27, 2009
- ஹேமா மாலினி : ஃபெரோஸ் கான் மட்டும்தான் என்னை பேபி என்று அழைத்த ஒரே மனிதர் ஹிந்துஸ்தான் டைம்ஸ், 28 ஏப்ரல் 2009.
- http://www.hindu.com/mp/2003/12/01/stories/2003120101690400.htm
- http://www.dnaindia.com/world/report_musharraf-says-no-entry-to-feroz_1030084
- முதல் பிலிம்ஃபேர் விருதுகள் 1953
- http://bollywoodlens.blogspot.com/2009/02/stardust-awards-2009.html
- http://www.bollywoodhungama.com/features/2009/02/16/4855/index.html
வெளி இணைப்புகள்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் பெரோஸ் கான்
- ஃபெரோஸ் கான் ஆப்கானிஸ்தானில் ஜனஷீன் படம் எடுக்க சென்றார்.
- பிலிம்ஃபேர் விருதுகள்
- ஃபெரோஸ் கான் - டெய்லி டெலிகிராப் இறப்புச்செய்தி