பெப்சி

பெப்சி (Pepsi) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது பெப்சிகோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையாகிறது. Caleb Bradham என்பவரால் 1890களில் தயாரிக்கப்பட்ட இப்பானம் 1898 ஆகஸ்ட் 28 அன்று பெப்சி எனப் பெயரிடப்பட்டது.

பெப்சி-கோலா

வகை கோலா
உற்பத்தி பெப்சிகோலா நிறுவனம்
மூல நாடு  ஐக்கிய அமெரிக்கா
அறிமுகம் 1903
சார்பு உற்பத்தி கொகா கோலா,RC Cola

வரலாறு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் காலேப் பிராட்ஹாம் என்னும் மருத்துவர் இருந்தார்.பல சோதனைகளை செய்து1993-இல் பிராட்ஸ் டிரிங் (Brad's drink) என்று தன் பெயர் கொண்ட பானத்தை அறிமுகம் செய்தார். ஐந்து ஆண்டு கடும் முயற்சி, பானம் மக்களிடம் எடுபடவில்லை. கொக்கோ கோலா பானியில் 1898இல் தன் பானத்துக்கு பெப்சி கோலா என்று பெயர் மாற்றினார். அடுத்த 30ஆண்டுகள் பெப்சி கோலாவுக்கு சோதனையான காலம். 1923,1931,1933, ஆகிய மூன்று ஆண்டுகளும் நிறுவனம் திவாலானது. புதிய முதலாளிகள் கையில் மறு பிறப்பெடுத்தது.

திருப்பு முணை

1929 முதல் 1942 வரை, அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி அப்போது ஆறரை அவுன்ஸ் கொண்ட போத்தல்களில் கொக்கோ கோலா விற்பனை ஆகிவந்தது. ஒரு போத்தல் விலை ஒரு நிக்கல் (1டாலருக்கு 20 நிக்கல்கள்) அதே ஒரு நிக்கலுக்கு 12 ஆவுன்ஸ் போத்தலை பெப்சி அறிமுகப்படுத்தியது. பொருளாதார வீழ்ச்சி காலத்தில் கொக்கோ கோலா-வின் விலையில் பாதிவிலையில் பெப்சிகிடைத்ததால், ஏராளமானோர் கொக்கோ கோலாவிலிருந்து பெப்சிக்கு மாறினர். கொக்கோ கோலா சுதாரிப்பதற்குள், இக்கால கட்டத்தில் பெப்சியின் சுவைக்கு பலர் பழகிவிட்டனர். அதன் பிறகு பெப்சி கொக்கோ கோலாவுக்கு இணையாக வளர்ந்துவிட்டது.[1],

இயற்கை வளங்களை உறிஞ்சுதல்

தமிழக சூழிலில் தாமிர பரணி ஆற்றின் நீரை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளது. இதற்கு இந்நிறுவனம் அளித்துள்ள குத்தகைத் தொகை வெறும் ரூ. 3600 மட்டுமே.[2]

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

  1. தி இந்து தமிழ்- பெப்சி தலைமுறை28.10.2014
  2. Vikatan கொள்ளை போகும் தாமிரபரணி தண்ணீர்... குளிர்பான கம்பெனிக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்! http://www.vikatan.com/news/article.php?aid=54811 07.11.2015
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.