பென்ட்லி

பென்ட்லி மோட்டார்சு லிமிட்டெட் (Bentley Motors Limited) விரைவான, சொகுசு தானுந்து வண்டிகளைத் தயாரிக்கும் பிரித்தானிய நிறுவனம் ஆகும். இது டபுள்யூ. ஓ. பென்ட்லி என்பவரால் சனவரி 18, 1919இல் நிறுவப்பட்டது. இது இங்கிலாந்தின் செசையர் கௌன்ட்டியில் கிரெவே என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் முதலாம் உலகப் போரின்போது வானூர்திகளில் பயன்படுத்தப்பட்ட உந்துப்பொறிகளுக்காக அறியப்பட்டது. போருக்குப் பின்னர் பென்ட்லி பிரான்சின் லெ மானில் நடைபெற்ற 24 மணிநேர தொடர்ந்த ஓட்டப் போட்டிகளில் 1924ஆம் ஆண்டு கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்தர தானுந்தைத் தயாரித்தார். அந்தாண்டும் தொடர்ந்து 1927, 1928, 1929 மற்றும் 1930களிலும் இப்போட்டியை இவரது நிறுவனம் வென்றது.

பென்ட்லியின் இறகுகளுடைய "பி" பட்டையும் அலங்காரமான மேற்கவிகையும்

1931இல் இந்த நிறுவனத்தை ரோல்சு-ரோய்சு கையகப்படுத்தி தயாரிப்பை இலண்டனில் இருந்து டெர்பிக்கும் பின்னர் தற்போதைய கிரெவேக்கும் மாற்றியது. 1998இல் செருமனியின் வாக்சுவேகன் குழுமம் £430 மில்லியனுக்கு இதனை வாங்கியது. பென்ட்லி சொகுசு தானுந்துகளின் மிகப்பெரும் சந்தையாக சீனா விளங்குகிறது.[1]

மேற்சான்றுகள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.