பெஞ்சமின் மர்க்கரியான்
பெஞ்சமின் பெனிக் எகிழ்சேவிச் மர்க்கரியான் (Beniamin "Benik" Egishevitch Markarian) (ஆர்மீனியம்: Բենիամին Եղիշեի Մարգարյան; பிறப்பு: 29 நவம்பர் 1913, சுலாவெர், திபிலிசு ஆளுநரகம்; இறப்பு:29 செப்டம்பர் 1985, யெரவான், ஆர்மேனியச் சோவியத் ஒன்றியம்) ஓர் ஆர்மேனிய வானியற்பியலாளர் ஆவார். மர்க்கரியான் பால்வெளித் தொடர் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. இவர் இந்தப் பால்வெளித் தொடர் பொது இயக்கத்தில் இயங்குவதைக் கண்டுபிடித்தார். செறிந்த ஒளிப்பொலிவு மிக்க பால்வெளிகளின் அட்டவணைக்கும் மர்க்கரியான் பால்வெளிகள் அட்டவணை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெஞ்சமின் மர்க்கரியான், 2013 ஆர்மேனிய அஞ்சல் வில்லையில்
வெளி இணைப்புகள்
- Beniamin Markarian at ARAS.am
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.