பூமி உச்சி மாநாடு

பூமி உச்சி மாநாடு (Earth Summit) எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development, UNCED) என்பது 1992, சூன் 3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும். 172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முடிவில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம் மற்றும் வனங்களின் நீடித்த மேலாண்மைக்கான கொள்கை அறிக்கை ஆகியவை 178 க்கும் அதிகமான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மாநாட்டின் பலனாக 1992 டிசம்பரில் வனங்கள் தொடர்பான நீடித்த அபிவிருத்தி ஆணையம் (The Commission on Sustainable Development) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.

பலன்

பூமி பற்றிய உச்சி மாநாட்டின் விளைவுகள்:

  • சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம்
  • அஜண்டா 21
  • வனக் கொள்கை
  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம்
  • உயிர்ப்பல்வகைமை தொடர்பான ஐ.நா ஒப்பந்தம்
  • ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாத்தல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.