பூநகரி

9°30′14.47″N 80°12′38.34″E பூநகரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகும்.இதனுடைய உள்ளூராட்சிமன்றமாக பூநகரி பிரதேச சபை விளங்குகின்றது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி சங்குபிட்டி பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும்.பூநகரியில் விளையும் மொட்டைகறுப்பன்,பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும்.பச்சைபெருமாள் அரிசி நீரிழிவு நோயை கட்டுபடுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது

பூநகரி

பூநகரி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
அமைவிடம் 9.504020°N 80.210649°E / 9.504020; 80.210649
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பூநகரில் அமைந்திருந்த கூட்டுப் படைத் தளத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் 1993 இல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பலத்த சேதங்களுக்குள்ளானதோடு நாகதேவன் துறையிலுள்ள அதிவேகப் படகுகள் புலிகளின் வசமாகியது. பின்னர் 2000 ஆண்டளவில் எதுவித தாக்குதலும் இன்றி ஆனையிறவு இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நோக்குடன் பின்வாங்கிச் சென்றனர். இப்பொழுது பலாலித் தளத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்கள் பூநகரியிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுவதால் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.