பூதன் தேவனார்
பூதன் தேவனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல்கள் இரண்டு உள்ளன.
அவை: குறுந்தொகை 285, நற்றிணை 60.
பாடல் தரும் செய்தி
வைகல் வாரார்
- குறுந்தொகை 285
அவர் சென்ற வழியில் புறா தன் பெடையை அழைத்து இன்புறுகிறதோ, அல்லது புறாவைப் பருந்து இரையாகப் பற்றிச் சென்று ஞெமை மரத்தில் இருந்துகொண்டு மகிழ்கிறதோ? ஒன்றும் புரியவில்லை. அவர் வருவேன் என்று சொன்ன பருவமும் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லை. இவ்வாறு தன் தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.
இதன் பொருள்
நிலையில்லாத நாள் (மீண்டும் வந்து) நிலைத்திருக்கும் காலத்திலும் அவர் வரவில்லை.
(மழையால்) ஒளி இல்லாத பகல் பொழுது (மாலையில்) ஒளியில்லாமல் போகும்போதும் அவர் என்முன் தோன்றவில்லை.
தைத் திங்களில் தண்கயம் படிபவள்
- நற்றிணை 80
அவன் தன் நோய்க்கு அவளைத் தவிர வேறு மருந்து இல்லை என்று தன் பாங்கனிடம் சொல்கிறான்.
கன்றை அவிழ்த்து விட்டு எருமைப்பால் கறக்கும் பெரும்புலர் விடியலில், தைந்நீராடும் அவளுக்குத் தழையும், தாரும் தந்திருக்கிறேன். அவள்தான் என் நோய்க்கு மருந்து. - இது தலைவன் பிதற்றல்.