பூ. கணேசலிங்கம்

பூபாலபிள்ளை கணேசலிங்கம் (Poopalapillai Ganeshalingam, பிறப்பு: சூலை 6, 1932[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பி. கணேசலிங்கம்
P. Ganeshalingam

நாஉ
பட்டிருப்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1983
முன்னவர் சோ. தம்பிராஜா
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 6, 1932(1932-07-06)
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
அரசியல் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி
இனம் இலங்கைத் தமிழர்

அரசியலில்

கணேசலிங்கம் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 10,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் கணேசலிங்கம் பட்டிருப்புத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[3].

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.