புளூஸ்

புளூஸ் (Blues) என்பது குரலும், இசைக்கருவிகளும் இணைந்த ஒருவகை இசை வடிவம் ஆகும். இது, ஐக்கிய அமெரிக்காவின் ஆபிரிக்க அமெரிக்கச் சமூகத்தினரின் வெளிப்பாடாக, ஆன்மீகப் பாடல்கள், பணியிடப் பாடல்கள் போன்றவற்றிலிருந்து தோற்றம்பெற்றது. இவ்விசை வடிவத்தின் இயல்புகள் இதில் ஆபிரிக்கச் செல்வாக்கு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

புளூஸ்
நாகரிகம் துவக்கம்
ஆப்ரிக்க-அமெரிக்க நாட்டுப்புற இசை, வேலைபொழுது இசை, ஆன்மீக இசை
மண்பாட்டு தொடக்கம்
19ஆம் நூற்றாண்டின் முடிவு, தெற்கு ஐக்கிய அமெரிக்கா
இசைக்கருவிகள்
கிதார், பாஸ் கிதார், பியானோ, ஹார்மோனிகா, அப்ரைட் பாஸ், டிரம்ஸ், சாக்ஸஃபோன், குரல் இசை, டிரம்பெட், டிராம்போன்
Derivative formsபுளூகிரேஸ், ஜாஸ், ரிதம் அண்ட் புளுஸ், ராக் அண்ட் ரோல், ராக் இசை
Subgenres
  • பூகீ-வூகீ
  • கிளாசிக் ஃபீமேல் புளூஸ்
  • கண்ட்ரி புளூஸ்
  • டெல்டா புளூஸ்
  • எலெக்டிரிக் புளூஸ்
  • ஃபிஃபெ அண்ட் டிரம் புளூஸ்
  • ஜம்ப் புளூஸ்
  • பியானோ புளூஸ்
இசை வகை
  • புளூஸ் ராக்
  • ஆப்ரிக்கன் புளூஸ்
  • பங்க் புளூஸ்
  • சோல் புளூஸ்
மண்டல நிகழ்வுகள்
பிரிட்டிஷ் புளூஸ்

கனடியன் புளூஸ் சிகாகோ புளூஸ் டெட்ராய்ட் புளூஸ் ஈஸ்ட் கோஸ்ட் புளூஸ் கன்ஸாஸ் சிட்டி புளூஸ் லூயிசியானா புளூஸ் மெம்ஃபிஸ் புளூஸ் நியூ ஆர்லியன்ஸ் புளூஸ் பைட்மான்ட் புளூஸ் செயின்ட் லூயி புளூஸ் ஸ்வாம்ப் புளூஸ் டெக்ஸாஸ் புளூஸ் வெஸ்ட் கோஸ்ட் புளூஸ்

ஹில் கண்ட்ரி புளூஸ்
மற்றவை
  • Blues genres
  • Blues musicians
  • Blues scale
  • Jug band
  • Origins
  • Country music

பிற்கால அமெரிக்காவினதும், மேற்குலகினதும் மக்கள் இசைமீது "புளூஸ்" இசையின் தாக்கம் உள்ளது. இது, ஜாஸ், ரிதம் அண்ட் புளூஸ், ராக் அண்ட் ரோல் போன்ற இசை வடிவங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. 1960களிலும், 1970களிலும், புளூஸ் இசைவடிவத்துடன் பல்வேறு வகையான ராக் அண்ட் ரோல் வடிவங்கள் சேர்ந்து புளூஸ் ராக் (blues rock) எனப்படும் கலப்பிசை வடிவம் ஒன்றும் வளர்ச்சியடைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.