புறக்கருவி இடைமுகம்

PCI என்பது கணினிகளில் காணப்படும் பரவலான இடைமுகம் ஆகும். PCI என்பது Peripheral Component Interface, அதாவது புறக்கருவி இடைமுகம் என்பதற்கு சுருக்கம். PCI 1990களில் உருவாக்கப்பட்டு, 1995இல் முதன்முறை செந்தரம் வெளியிடப்பட்டது. முன்பு தனிநபர் கணினிகளில் புழக்கத்தில் இருந்த வேகக்குறைவான் ISA (Industry Standard Architecture-தொழிலக நெறி கட்டமைப்பு) பாட்டையை கொஞ்சங்கொஞ்சமாக நீக்கிவிட்டது. முதலில் சேவையகங்களில் (Servers) EISA (Extended ISA/தொழிலக நெறி விரிவு கட்டமைப்பு) பாட்டையை நீக்கி PCI இடம்பெற்றது. பிறகு தனிநபர் கணினிகளில் ISAக்கு மாற்றாகிவிட்டது.

PCI ஒரு இணைநிலை பாட்டையாக (parallel bus) 32-துணுக்கு/33 MHz, 64-துணுக்கு/32 MHz, 32-துணுக்கு/64 MHz (3.3V மட்டும்), 64-துணுக்கு/64 MHz ஆகிய ஆக்கநிலைகளில் உள்ளது. PCI-X பதி 2.0 செந்தரத்தால் PCI பாட்டை 533 MHz ஆகிய வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டது. PCI-X பாட்டை PCI பாணியில் இயங்கும் போது,

அடிப்படைகள்

PCI ஒரு ஏற்றம்-சேமிப்பு கட்டமைப்பு (load store architecture) அடிப்படையில் அமைந்த பாட்டையாகும். ஒரு PCI அமைப்பில் பல முகவர்கள் ஒரே பாட்டையை பகிர்கின்றனர். ஒரு PCI பாட்டையில் மூன்று வகைகளான முகவர்கள் உள்ளன—புரவன்-இணைவி (initiator), இலக்கு (target) மற்றும் துவக்கி (target).

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.