புயவகுப்பு
புயவகுப்பு என்பது கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தில் ஓர் உறுப்பாக வரும். இது பொருள் நோக்கிக் கூறப்படும் ஓர் இலக்கணத் தொடர். புயம் என்னும் சொல் ஆகுபெயராய் வலிமையைக் குறிக்கும். பாட்டுடைத் தலைவன் தன் புய வலிமையைத் தந்தான் எனப் பாடுவது புயவகுப்பு.
எடுத்துக்காட்டு
புயவகுப்பு
சந்த விருத்தம்
இடமற மிடைதரு கடவுளர் மடவியர்
- எறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன
- எறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன
- இனவளை கொடுமத னிடுசய விருதென
- இறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன
- இறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன
- இருவரு நிகரென வரிசிலை விசயனொ
- டெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன
- டெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன
- இணையடி பரவிய மலடிமு னுதவிய
- இடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன
- இடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன
படவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்
- பருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன
- பருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன
- பருகுமி னமிர்தென வுருகிரு கவிஞ்ர்கள்
- பனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன
- பனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன
- படரொளி விடுசுடர் வலயம தெனவொரு
- பருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன
- பருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன
- பரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்
- பணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன
- பணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன
மடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு
- மதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன
- மதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன
- வழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்
- வருநர கரியின்ம தத்தைத் தடிந்தன
- வருநர கரியின்ம தத்தைத் தடிந்தன
- மதகரி யுரியதள் குலகிரி முதுகினின்
- மழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன
- மழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன
- மலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ
- மதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன
- மதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன
குடவளை துறைதொறு முடுநிரை யெனவரி
- குளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை
- குளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை
- குலவிய படர்சிறை மடவன மொடுசில
- குருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு
- குருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு
- குரைபுனல் வரநதி சுரர்தரு முருகவிழ்
- கொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு
- கொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு
- குலகிரி யுதவிய வளரிள வனமுலை
- கொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே. [1]
வெளி இணைப்பு
அடிக்குறிப்பு
- காசிக் கலம்பகம் நூலிலுள்ள பாடல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.