புத்தமித்திரர்

புத்தமித்திரர் ஒரு சிற்றரசர். பொன்பற்றியூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர். அவர் காலத்துச் சோழ அரசன் வீரராசேந்திரன். இவனது காலம் கி.பி. 1060-1090. இவன் ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்டவன். இவன் பெயரால் புத்தமித்திரர் செய்த நூல் ‘வீரசோழியம்’. புத்தமித்திரர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்.

தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்றாகப் பகுத்து எழுதப்பட்டு வந்தது. புத்தமித்திரர் தமக்கு முன்னர் தோன்றிய ‘அணியியல்’ போன்ற நூல்களை உள்ளத்தில் கொண்டு தமிழ் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம்(அணி) என ஐந்தாகப் பகுத்துக்கொண்டு இலக்கணநூல் செய்துள்ளார்.

வடமொழி இலக்கணத்தைத் தமிழ்-இலக்கணத்தில் இவர் புகுத்தியுள்ளார். தமிழுக்கு இயல்பில்லாத இலக்கணத்தைப் புகுத்தியதால் இவரது நூல் தமிழ்ப்பெருமக்களால் பின்பற்றப்படவில்லை.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  • தமிழ் இலக்கண நூல்கள் மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், பதிப்பாசிரியர் முனைவர் ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.