புதுக்குடியிருப்புப் போர்

புதுக்குடியிருப்பு போர் என்பது மார்ச் 2009 இறுதியிலும் ஏப்ரல் தொடக்கத்திலும் புதுக் குடியிருப்பில் இலங்கைப் படைத்துறைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் ஆகும். இந்தப் போரில் படையினர் புதுக்குடியிருப்பை ஏப்ரல் 5 இல் முற்றிலும் கைப்பற்றியதாக அறிவித்தனர். மூன்று நாள் போரில் 450 புலிகள் கொல்லப்பட்டதாகவும், இதில் 250 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஆன பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, கேணல் நாகேசு, பிரபாகரனின் மெய்க்காவலர் பிரிகேடியர் கடாபி ஆகியோர் அடங்குவர். [1]


மேற்கோள்கள்

  1. Top LTTE leaders felled, says Sri Lanka

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.