புதுக்கற்காலப் புரட்சி

புதுக்கற்காலப் புரட்சி (Neolithic Revolution) என்பது கற்காலத்தின் இறுதிக் காலத்தில் தொடங்கி சிறுசிறு ஆயுதங்களும் உபகரணங்களையும் மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய காலப்பகுதியில் வேகமாக வளர்ச்சியுற்ற சமூகப் பண்பாட்டு வளர்ச்சிகள் பற்றியதாகும். இது வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு காலப்பகுதியில் நிகழ்ந்திருக்கலாமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்காலப்பகுதியிலேயே மனிதன் வேட்டையடுவதிலிருந்து பயிரிடல் மற்றும் வேளாண்மை வாழ்வுக்குத் திரும்பினான்.

விளைவுகள்

விவசாயம் மனிதர்களுக்கு அவர்களின் உணவு விநியோகத்தில் அதிக கட்டுப்பாட்டை கொடுத்தது. ஆனாலும் ஒரே இடத்தில் வாழ்ந்ததால் கற்கால மக்களின் ஊட்டச்சத்து தரநிலைகளில் பொதுவாக வேட்டையாடி சேகரித்து வாழ்ந்தவர்களைவிட விவசாயம் செய்தவர்களுக்கு தாழ்வான வாழ்நாட்களே இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும் காரணம் ஒரே இடத்தில் வாழ்ந்ததால் நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பிருந்தது. மனிதர்களின் சராசரி உயரமும் குறைந்தே உள்ளது. கற்கால மனித உயர நிலைகளுக்கு திரும்பி வர இருபதாம் நூற்றாண்டு வரை பிடித்தது. விவசாய உணவு உற்பத்தி செய்வதில் மாற்றமும் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ்வதும், புதிய கருவிகளைக்கண்டு பிடிப்பதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் விளைவுகளாம். இத்தகைய கூட்டு வாழ்வானது அரசு மற்றும் அரசியலுக்கும் அதிகார வர்கத்தின் தோன்றலுக்கும் வழிவகுத்தது.

பின்விளைவு புரட்சிகள்

இப்புரட்சியின் பின்விளைவாக பல சிறு புரட்சிகளும் நடந்தன. அவை:

  • தோல் பொருட்களின் பயன்பாடு
  • உரம் தயாரித்தல்
  • கம்பளி தயாரிப்பு
  • பால் மற்றும் அதனை சார்ந்தவைகளின் பயன்பாடு
  • பாதுகாவலுக்காக மிருகங்களை வளர்ப்பது

இப்புரட்சியே விலங்குகளை மனிதன் புதிய முறைகளில் பயன்படுத தூண்டியது என்பர். ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்ததால் அவ்விடத்தில் உணவு சேமிக்கும் முறையினை வகுத்தனர். இதனால் பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிப்பிழைக்க பெரிதும் உதவியது. மேலும் கூட்டாக எதிரிகளை தோற்கடிப்பது எளிதானது. இதுவே நகரங்களும் நாகரிகமும் தோன்றக்காரணியாகும்.

நோய்கள்

ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்ததால் தொற்று நோய்கள் விரைவாக பரவ வாய்ப்பிருந்தது. இத்தகைய நோய்கள் மிருகங்களிடமிருந்தும் தொற்றும் அபாயம் இருந்தது. இத்தகைய நோய்களுள் சில இன்ஃபுளுவென்சா, பெரியம்மை, மற்றும் தட்டம்மை ஆகும். அதிகமாக நோய்களுக்குள்ளானதால், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ந்தது. 10,000 வருடங்களாக இருந்த இந்த மனித விலங்கு தோடர்பினால் நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு சந்ததியிலும் கூடியது. ஆயினும் இத்தகைய எதிர்ப்பு சக்திகளை வளர்த்துக்கொள்ளா இனங்கள் முற்றிலும் அழிந்தன. குறிப்பாக கரிபியன் மற்றும் பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் மனித நடமாட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அமெரிக்காவின் 90% மக்கள் தொகை ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே அழிந்திருந்தது. இன்கா பேரரசு போன்ற சில கலாச்சாரங்கள் இலாமா போன்ற மிருகங்களை வளர்க்கும் போது அதன் பாலைக்குடிக்காமலும், அதனை தனியாக கொட்டிலில் அடைத்து தங்களைக் காத்துக்கொண்டனர். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியில் 23 மில்லியன் மக்கள் வாந்திபேதியால் 1865 முதல் 1949 வரையும் மேலும் பல மில்லியன் மக்கள் மலேரியா, காச நோய் மற்றும் இன்ஃபுளுவென்சாவினால் இறந்ததாக குறிப்புகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. நினைத்ததைவிட விவசாயம் பழமையானது | கால்கரி பல்கலைக்கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.