புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2014 (New Health Insurance Scheme, 2014) என்பது, தமிழ்நாடு அரசின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மருத்துவ நலனுக்காகத் தமிழக அரசால் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். அரசு ஊழியர்களுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 1-07-2014 முதல் நடைமுறையானது. இத்திட்டத்தை, இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம், தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து செயல்படுத்துகிறது. யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம் மற்றும் பயனாளிகளுக்கிடையே மூன்றாம் நபர் நிர்வாகியாக (Third Party Administrator) எம்டி. இந்தியா ஹெல்த் கேர் நிறுவனம் (MD India Health Care Services Pvt., Ltd.,) இருந்து செயல்படும்.[1].[2] [3]

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சலுகைகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகபட்ச வரம்பாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை, அரசு ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தாமல் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளலாம். [6]

  • இத்திட்டத்தின்படி மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்க ஊழியர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அறுபதாயிரம் ஊழியர்களுக்கும் இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.[7][8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.