புணே மண்டலம்

புணே மண்டலம் மகாராட்டிர மாநிலத்தின் தென்மேற்கில் உள்ளது.

புணே மண்டலம் மகாராட்டிரம், நீல வண்ணத்தில்.
புணே மண்டலம்
இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும்.[1] இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும், வடக்கே நாசிக் மண்டலமும், கிழக்கே ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன.
சில புள்ளிவிவரங்கள்
- பரப்பளவு: 58,268 கிமீ²
- மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு): 19,973,761
- மாவட்டங்கள்: கோலாப்பூர், புணே, சாங்கிலி, சோலாப்பூர்
- படிப்பறிவு: 76.95%
- பாசன பரப்பு: 8,896 கிமீ²
- முக்கியப் பயிர்கள்: சோளம்,கம்பு,கரும்பு,கோதுமை,அரிசி,சோயா, வெங்காயம், நிலக்கடலை, காய்கறிகள், மஞ்சள், திராட்சை, மாதுளை
2013 ஆண்டில் மாநில சராசரியை விட கூடுதலாக பள்ளி இறுதித் தேர்வில் 81.91 விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.[2]
வரலாறு
இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:
- முந்தைய சிற்றரசுகளான மீரஜ்,ஔந்த்,சாங்க்லி,டஸ்காவ்ன் மற்றும் குருந்த்வாட் இவற்றை இணைத்து புதிய சாங்கிலி மாவட்டம் உருவானது.
- பூனா என அழைக்கப்பட்ட மாவட்டப பெயரை புணே என மாற்றியது.
- தற்போதைய சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு பந்தர்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
- தற்போதைய புணே மாவட்டத்திலிருந்து கிழக்கு பகுதிகளான சிரூர்,புரண்டர்,தௌண்ட்,பராமதி மற்றும் இந்தாப்பூர் தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு புதிய பராமதி மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
மேற்சான்றுகள்
- "மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)". மகாராட்டிர அரசு. பார்த்த நாள் 9 சூன் 2014.
- "At 81.91,Pune division pass percentage higher than states". இந்தியன் எக்சுபிரசு (மே 31, 2013). பார்த்த நாள் 9 சூன் 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.