புசி றயற்

புசி றயட் (உருசியம்: Пусси Райот;) என்பது மாசுகோவில் இயங்கும் ஓர் உருசிய பெண்ணிய பங்க்-ராக் இசைக் குழுமம். இது உருசியாவில் அரசியல் தூண்டல் மிக்க முன்னேற்பாடற்ற நிகழ்த்தல்களை எதிர்பார்க்காத இடங்களில் செய்வதற்காக அறியப்பட்டது. யோனிக் கலகம் என்ற பொருள் தரும் இதன் ஆங்கில பெயர் கூட விமர்சிக்கப்பட்ட பெயர் ஆகும்.

புசி றயற்
புசி றயறின் ஏழு உறுப்பினர்கள்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்மாஸ்கோ,உருசியா
இசை வடிவங்கள்பங்க்-ராக் , போராட்டக் கலை
இசைத்துறையில்2011 – இற்றை
இணையதளம்pussy-riot.livejournal.com

பெப்ரவரி 21, 2012 இந்தக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் மீட்பர் கிறித்து பேராலயத்தில் உருசியப் குடியரசுத் தலைவர் விளாதிமிர் பூட்டினுக்கு எதிராகவும், உருசிய பழமைக்கோட்பாடு கிறித்தவ அவையின் பூட்டின் சார்பு, அரசு சார்பு அரசியலுக்கு எதிராகவும் ஒரு நிகழ்த்தலை நடத்தினர். இதனை தேவாலய காவலாளிகள் தடுத்தபோது அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மார்ச் 3 இந்த நிகழ்த்தல் தொடர்பான ஒரு நிகழ்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆகத்து 17, 2012 இல் இவர்கள் குண்டர்த்தனம் செய்தாதாக குற்றம் காணப்பட்டு இக் குழுவின் மூன்று பேருக்கும் ஒவ்வொருவருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கடும் தட்டணையைக் கண்டித்தும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் உலகின் பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வெளி இணைப்புகள்

நிகழ்படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.