புகைப்பனி

புகையும் பனியும் கலந்து புகைப்பனி (Smog) உருவாகின்றது. இது விலங்குகளுக்கு நுரையீரல் ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன் தாவரங்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. தெருக்களில் துாசிமண்டலத்தைப் புகைப்பனி உருவாக்குவதால் சாலை விபத்துகள் அதிகாிக்கின்றன. 2016 டிசம்பாில் புதுடெல்லியில் புகைப்பனியால் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டது. முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு புகையும் பனியும் இணைத்து புகைப்பனி என்ற சொல்லை உருவாக்கினர். அதாவது SMOKE (புகை) + FOG (பனி) = SMOG (புகைப்பனி)[1] என ஆனது.

நவம்பர் 2016ல் புது டெல்லியில் உருவான புகைப்பனி

இது ஒரு காற்று மாசுபாடு ஆகும். வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைப் புகை ஆகியவை வளிமண்டல காற்று மற்றும் சூாிய ஒளியுடன் வினை புாிவதால் புகைப்பனி உருவாகின்றது. காற்று மாசுபாட்டை பூமிக்கு மிக அருகில் புகைப்பனி வைத்திருப்பதால் காற்றில் நச்சுத்தன்மை அதிகமாகிறது.

வரலாறு

1905 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது சுகாதார மாநாட்டில் ஹென்றி அன்டனி டேஸ் வோக்ஸ் (Dr. Henry Antoine Des Voeux) என்பாா் அளித்த கட்டுரையில் SMOKE (புகை) + FOG (பனி) = SMOG (புகைப்பனி)[2] என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.

காரணங்கள்

இயற்கை காரணங்கள்

எாிமலை வெடிப்பில் வெளியேறும் கந்தக டை ஆக்சைடு மற்றும் துாசியே புகைப்பனி உருவாக இயற்கை காரணமாகிறது.

செயற்கை காரணங்கள்

நிலக்கரிப் புகை, வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை[3] மற்றும் பெட்ரோலியப் பொருட்களால் வரும் புகை ஆகியவை புகைப்பனி உருவாக செயற்கை காரணமாகிறது.

புகைப்பனியில் உள்ளவை

கார்பன் மோனோ ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், எளிதில் ஆவியாகும் காிமப்பொருட்கள், கந்தக டை ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன்கள், விச வாயுக்கள்,தரை நிலை ஓசோன் ஆகியவை புகைப்பனியில் உள்ள வாயுக்கள் ஆகும்.[4]

புகைப்பனியால் ஏற்படும் பாதிப்புகள்

மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகிறது. மூச்சு திணறல், இழப்பு, இருமல் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.[5] புற்று நோய், ஞாபக மறதி நோய், குழந்தைகள் குறைபாடுடன் பிறத்தல் போன்றவற்றிற்கும் காரணமாகிறது.

மேற்கோள்கள்

  1. பொ.ஐங்கரநேசன் (2007). தெரியுமா-அறிவியல் விளக்கங்களின் தொகுப்பு. சென்னை: அரும்பு பதிப்பகம். பக். 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88038-73-3.
  2. Piazzesi, Gaia (2006). The Catalytic Hydrolysis of Isocyanic Acid (HNCO) in the Urea-SCR Process (PhD Thesis). ETH Zurich. பக். 1. http://www.psi.ch/ceg/PublicationsEN/Piazzesi,_PhD_thesis,_ETH_Zurich,_2006.pdf.
  3. United States Environmental Protection Agency(30 April 2008). "EPA Tools Available as Summer Smog Season Starts". செய்திக் குறிப்பு.
  4. "State and County Emission Summaries: Carbon Monoxide". Air Emission Sources. United States Environmental Protection Agency (25 October 2013).
  5. Bharadwaj, Prashant; Zivin, Joshua Graff; Mullins, Jamie T.; Neidelllast, Matthew (July 8, 2016). "Early life exposure to the Great Smog of 1952 and the Development of Asthma". American Journal of Respiratory and Critical Care Medicine (ATS Journals) 194 (12). http://www.atsjournals.org/doi/abs/10.1164/rccm.201603-0451OC.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.