பீஷம் சாஹ்னி

பீஷம் சாஹ்னி (Bhisham Sahni; 8 ஆகத்து 1915 – 11 சூலை 2003) ஓர் இந்தி எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், நடிகரும் ஆவார். பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் பிறந்த இவர் பாகிஸ்தான் பிரிவினையின் அவலங்கள் குறித்து எழுதிய தமஸ் (இருள்) என்ற புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும் இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், குஜராத்தி, மலையாளம், காஷ்மீரி, மணிப்புரி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தொலைக்காட்சித் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் 1998 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான இந்திய அரசின் பத்மபூஷண் விருதினைப் பெற்றவர் ஆவார்.[1] நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரது தமஸ் நூலுக்கு 1975 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். மேலும் 1979 இல் சிரோமணி எழுத்தாளர் விருது, உதிரப்பிரதேச மாநில அரசின் விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். இவர் புகழ்பெற்ற இந்தி நடிகர் பல்ராஜ் சாஹ்னியின் இளைய சகோதரர் ஆவார்.

பீஷம் சாஹ்னி
தொழில் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர்
எழுதிய காலம் 1955–2003
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் 21 July 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.