பீட்டர் டி. டேனியல்ஸ்
பீட்டர் டி. டேனியல்ஸ் (பி. டிசம்பர் 11, 1951) உலகமொழிகளின் எழுத்துக்கள் பற்றிய ஆய்வில் தேர்ந்த அறிஞர். இவர் வில்லியம் பிரைட் என்பாருடன் சேர்ந்து உலகின் எழுத்து முறைகள் (The World's Writing Systems என்னும் நூலை 1996ல் எழுதியுள்ளார். அதில் "அபுஜாடு" ("abjad") எழுத்து முறை, "அபுகிடா" (abugida) எழுத்து முறை என்னும் முறைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளார். அபுஜாடு என்னும் முறை மெய்யெழுத்துக்கள் மட்டும் அடங்கிய அகரவரிசை (நெடுங்கணக்கு) கொண்டது. இதில் உயிரெழுத்துக்களுக்குத் தனி எழுத்துக்கள் கிடையாது. அபுகிடா எழுத்து முறை என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து, மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் கொண்ட அகரவரிசை. தமிழ், மற்றும் இந்திய மொழிகள் பலவற்றிலும் இந்த அபுகிடா எழுத்து முறைதான் பயன்பாட்டில் உள்ளது. இவைதவிர, ஆல்ஃவபெட் (alphabet) முறை என்பது உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் மட்டுமே (உயிர்மெய் எழுத்துக்கள் கிடையாது) கொண்ட முறை. அதாவது உயிர்மெய்யற்ற அகரவரிசை. இவர் தெளிவுபடுத்திய இம்முறைகளும் அதற்கான கலைச்சொற்களும் இன்று மொழியியலில் பரவலாக எடுத்தாளப்பட்டு வருகின்றன.
பீட்டர் டி. டேனியல்ஸ் | |
---|---|
பிறப்பு | 11 திசம்பர் 1951 (age 67) |
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
துணைநூல்கள்
- Peter T. Daniels, William Bright: The World's Writing Systems, Oxford University Press 1996, ISBN 0-19-507993-0