பிளாஸ்மோடியம்

பிளாஸ்மோடியம் புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் மலேரியா நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள், ஊர்வன மற்றும் எலிகளையும் பாதிக்கின்றன.

பிளாஸ்மோடியம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: Chromalveolata
பெருந்தொகுதி: Alveolata
தொகுதி: Apicomplexa
வகுப்பு: Aconoidasida
வரிசை: Haemosporida
குடும்பம்: Plasmodiidae
பேரினம்: Plasmodium
Marchiafava & Celli, 1885
subgenera

Asiamoeba (5 இனங்கள்)
Bennetinia (1 இனம்)
Carinamoeba (7 இனங்கள்)
Giovannolaia (14 இனங்கள்)
Haemamoeba (12 இனங்கள்)
Huffia (2 இனங்கள்)
Lacertamoeba (2 இனங்கள்)
Laverania (5 இனங்கள்)
Ophidiella (3 இனங்கள்)
Novyella (19 இனங்கள்)
Nyssorhynchus (1 இனம்)
Paraplasmodium (3 இனங்கள்)
Plasmodium (30 இனங்கள்)
Sauramoeba (15 இனங்கள்)
Vinckeia (32 இனங்கள்)
Incertae sedis (124 இனங்கள்)

இவ்வுயிரி ஓர் அகச்செல் இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சிக்கென ஓர் முதுகெலும்பியும், இரத்தம் உறிஞ்சும் கொசுக்களும் தேவைப்படுகின்றன.

1898ஆம் ஆண்டு ரொனால்ட் ராஸ் என்பவர் Culex கொசுக்களில் பிளாஸ்மோடியம் உள்ளதை நிரூபித்தார். இதற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Giovanni Battista Grassi என்ற இத்தாலிய பேராசிரியர் அனபிலஸ் கொசுக்கள் மட்டுமே மனிதர்களிடையே மலேரியா நோயைப் பரப்பவல்லது என கண்டறிந்தார்.

வாழ்க்கைச் சுழற்சி

மலேரியா நோயை உருவாக்கும் பிளாஸ்மோடியம் எனப்படும் அதிநுண்ணுயிரியின் வாழ்க்கை வட்டம்

பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை வட்டத்தில், மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன.

பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுக்கள் இரத்ததில் கலக்கின்றன. பின்பு, கல்லீரலின் உட்புறமுள்ள ரெட்டிகுலோ எண்டோதீலியல் (reticuloendothelial) செல்களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது.

கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.

சிவப்பணுக்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக (gametocyte) உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன.

கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து சைகோட் (Zygote) என்னும் கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டை (ookinetes) எனப்படுகின்றன. இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முதுகெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன.

மீரோசோயிட்டுகள் சிவப்பணுக்களிலிருந்து வெளியேறும் பொழுது இரத்ததில் கலக்கும் நச்சுப் பொருட்களே மலேரியா காய்ச்சலுக்குக் காரணமாகும்.

வெளி இணைப்புகள்

பிளாஸ்மோடியம் வாழ்க்கைச் சுழற்சி


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.