பிளாய்ட் மேவெதர்
பிளாயிட் மேவெதர் (இளையர்) (Floyd Joy Mayweather Jr.) என்பவர் அமெரிக்காவின் குத்துச் சண்டை விளையாட்டு வீரர் ஆவார்.[1] 1977 பிப்பிரவரி 24 இல் மிச்சிகனில் பிறந்த இவர் 1996 முதல் 2017 வரை 15 உலகப் பட்டங்களைப் பெற்றார். இவருடைய தந்தையார் பிளாயிட் சீனியரும் குத்துச் சண்டை வீரர் ஆவார். 1996 ஆம் ஆண்டில் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் மேவெதர் முழுநேர குத்துச்சண்டை வீரராக மாறினார்.

பிளாய்ட் மேவெதர்
.இவர் கடந்த 2 ஆண்டுகளாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அயர்லாந்தின் பிரபல குத்துச்சண்டை வீரரான மெக் கிரிகோருக்கு எதிராக 2017 ஆக்சுடு 26 இல் இலாசு வேகசில் நடந்த போட்டியில் மீண்டும் போட்டியில் இறங்கி வெற்றி பெற்றார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.