பிளத்தோன் செர்கேயெவிச் போரெத்சுகி
பிளத்தோன் செர்கேயெவிச் போரெத்சுகி (Platon Sergeevich Poretsky) (உருசியம்: Платон Серге́евич Порецкий; அக்தோபர் 3, 1846 எலிசவேத்கிராது – ஆகத்து 9, 1907 செர்னிகிவ் ஆளுகைப்பிரிவு) ஒரு குறிப்பிடத்தக்க உருசிய வானியலாளரும் கணிதவியலாளரும் கணித அளவையியலாளரும் ஆவார்.
பிளத்தோன் செர்கேயெவிச் போரெத்சுகி | |
---|---|
![]() | |
பிறப்பு | க்ரோபியவனிட்ஸ்க்கியி |
இறப்பு | Zhovid |
படித்த இடங்கள் | கார்கீவ் பல்கலைக்கழகம் |
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர் |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
இவர் கார்க்கோவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர், அசுத்ரகானிலும் புல்கோவோ வான்காணகத்திலும் பணிபுரிந்தார்.
பின்னர், கசான் பல்கலைக்கழக வானியலாளராக இருந்தபோது, முன்னாள் ஒருசாலைப் பணியாரான அப்பல்கலைக்கழகக் கணிதவியல் பேராசிரியரான ஏ. வி. வசீலியேவ்வின் (father of Nicolai A. Vasiliev) அறிவுரைப்படி இவர் ஜார்ஜ் பூலின் நூல்களைக் கற்றுப் புலமைபெற்றார். பின்னர் போரெத்சுகி சிறப்பு அளவையியல் சமன்பாடுகள் வாயிலாக, அளவையியல் வகைக்கெழுக் கணிதவியலை உருவாக்கினார் அதை நிகழ்தகவுக் கோட்பாட்டுக்கும் பயன்படுத்தலானார். இவ்வாறு, ஜார்ஜ் பூல், வில்லியம் சுடேன்லி எவான்சு, எர்னெசுட்டு சுரோடர் ஆகிய அளவையியலாளர், கணிதவியலாளர்களின் பணிகளை விரிவுபடுத்தி செறிவாக்கினார். இவர் போரெத்சுகி வடிவங்களுக்கான விதியையும் உருவாக்கினார். இவர் முதன்முதலாக, பின்னிகழ்வுகளுக்கும் அதைச் சார்ந்த பூலிய அறிவுச் சிந்தனைக்கும் பொது பகுப்பாய்வைத் தந்தார்.[1] இது ஆர்க்கி பிளேக்கின் பிளேக் மரபு வடிவங்களை அவர் உருவாக்குவதற்கான பின்னணி அறிதிறக் களத்தைச் சமைத்துத் தந்தது.
குறிப்புகள்
- Platon Poretsky, "Sept lois fondamentales de la théorie des égalités logiques", Bulletin de la Société Physico-Mathématique de Kasan, 2:8:33–103, 129–181, 183–216, 1898, as cited in Frank Markham Brown, Boolean Reasoning: The Logic of Boolean Equations, 2nd edition, 2003, p. 77
மேற்கோள்கள்
- Styazhkin, N.I. History of Mathematical Logic from Leibniz to Peano. Cambridge, Mass./ London, MIT Press, 1969.
- Bazhanov, V.A. New Archival Materials, Concerning P.S. Poretsky. In: Modern Logic, 1992, vol. 3. N 1. pp. 80–81.
- Bazhanov, V.A. Life and Academic Work of Mathematical Logic Research Pioneer in Russia P.S. Poretsky. In: Voprosy Istorii Estestvoznania i Tekhniki, 2005, N 4. pp. 64–73 (in Russian).
- Bazhanov, V.A. History of Logic in Russia and the USSR. Moscow, Kanon+, 2007 (in Russian). ISBN 5-88373-032-9
வெளி இணைப்புகள்
- Platon Poretsky
- S.L. Katrechko, Platon Sergeevich Poretskij