பிரெனெல் வில்லை

ஃபிரெனெல் வில்லை (Fresnel lens) என்பது, பிரான்சைச் சேர்ந்த இயற்பியலாளரான அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடக்கத்தில் கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன் வடிவமைப்பு பெரிய ஒளித்துளைகளுடனும், (aperture), குறைந்த குவியத் தூரத்துடனும் கூடிய வில்லைகளை, வழமையான முறையில் செய்யப்படும் வில்லைகளிலும் குறைந்த அளவு நிறையுடனும், குறைந்த கனவளவு கொண்டதாகவும் செய்வதற்கு இடமளித்தது. முன்னைய வில்லைகளைவிட ஃபிரெனெல் வில்லைகள் மெல்லியவை. இதனால் கூடிய ஒளி அவற்றினூடு செல்லக்கூடியதாக இருந்தது.

1: ஃபிரெனெல் வில்லை ஒன்றின் குறுக்கு வெட்டுமுகம்
2: சம வலுவுள்ள வழமையான வில்லையொன்றின் வெட்டுமுகம்

உருவாக்கம்

பல்வேறு வில்லைத் துண்டுகளைச் சட்டகம் ஒன்றில் பொருத்தி மெல்லிய வில்லைகளை உருவாக்கும் எண்ணம், ஜார்ஜஸ் லூயிஸ் லெக்கிளார்க், கொம்டே டி பவ்வன் என்பவர்களால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இதனை உருவாக்கிய பெருமை அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்லுக்கே கொடுக்கப்படுகிறது. சிமித்சோனியன் இதழின்படி முதலாவது ஃபிரெனெல் வில்லை 1823 ஆம் ஆண்டில் கோர்டுவான் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இதன் ஒளி 20 மைல்கள் வரை தெரியக்கூடியதாம்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.