பிரெண்டன் டெய்லர்

பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்: (Brendan Ross Murray Taylor, பிறப்பு: பெப்ரவரி 6, 1986), முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அந்த அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். சிம்பாப்வே அணிக்காக28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிளும்,193 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 38 இருபது20 போட்டிகளிலும் மற்ற்றும் 128 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் அவ்வப்போது குச்சக் காப்பாளராகவும் , இடதுகை சுழற் பது வீச்சளராகவும் விளையாடினார். முன்னாள் சிம்பாப்வே அணியின் தலைவரான அலிஸ்டர் கேம்பெல் டையல் கடந்த எட்டு ஆண்டுகளில் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்துள்ளார எனத் தெரிவித்துள்ளார்.[1]

பிரென்டன் டைய்லர்

சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்
பிறப்பு 6 பெப்ரவரி 1986 (1986-02-06)
ஹராரே, சிம்பாப்வே
வகை துடுப்பாட்டம், மேலதிக குச்சுக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 64) மே 6, 2004:  இலங்கை
கடைசித் தேர்வு செப்டம்பர் 20, 2005:  இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 80) ஏப்ரல் 20, 2004:  இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 1, 2015:   பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாஇருபது20முதல்
ஆட்டங்கள் 23 165 26 86
ஓட்டங்கள் 1,493 4,999 594 6,376
துடுப்பாட்ட சராசரி 34.72 33.55 28.28 43.8
100கள்/50கள் 4/6 6/27 0/4 22/23
அதிக ஓட்டங்கள் 171 145* 75* 217
பந்து வீச்சுகள் 42 396 30 366
இலக்குகள் 0 9 1 4
பந்துவீச்சு சராசரி 45.11 17.00 53.25
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 0/6 3/54 1/16 2/36
பிடிகள்/ஸ்டம்புகள் 23/ 98/20 10/1 108/4

மார்ச் 1, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

இவர் சிம்பாப்வே அணி தவிர சிட்டகொங் கிங்ஸ், லாகூர் கலாந்தர்ஸ், மஷோனாலாந்து அ அணி, மிட் வெஸ்ட் ரைனோஸ், நாட்டிங்ஹாம்சயர், பிரைம் பேங்க் கிளப், சன்ரைசர்ஸ் ஐதராபத் , வெலிங்டன் , சிம்பாப்வே அ, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான சிம்பாப்வே அணி மற்றும் சிம்பாப்வே லெவன் அணி போன்ற அணிகளில் விளையாடியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோபைத் தொடர் வரை அந்த அணியின் தலைவராக இருந்தார். பின்னர் அது எல்டன் சிகும்பராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்ட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தொடர்ந்து இரு போட்டிகளில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள் மற்றும் 107 ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இரு நூறு ஓட்டங்களைப் பதிவு செய்த முதல் சிம்பாப்வே வீரர் எனும் சாதனை படைத்தார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் மீண்டும் ஒருமுறை இரண்டு போட்டிகளில் தொடர்ந்து நூறு ஓட்டங்கள் அடித்தார். மேலும் அதே தொடரில் 433 ஓட்டங்களை எடுத்தார். இதுவே உலகக் கோப்பையில் சிம்பாப்வே வீரர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.

2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற எச் ஆர் வி இருபது20போட்டித் தொடரில் இவர் வெலிங்டன் துடுப்பாட்ட அணியில் அயல்நாட்டு வீரராக விளையாடினார். ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 10 நூறுகளை அடித்து சாதனை படைத்துள்ளாஅர். அதற்கு முன்பாக முன்னாள் தலைவர் அலிஸ்டர் கேம்பெல் 7 நூறுகளை அடித்ததே சாதனையாக இருந்தது. செப்டம்பர் 14, 2017 இல் இவர் தேசிய அணியில் இருந்து விலகினார். 2017 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்சயர் அணியுடனான ஒப்பந்தத்தினை ரத்து செய்தார்.[2] நவம்பர் 2018 இல் இரு ஆட்டப் பகுதிகளிலும் நூறு ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[3]

தேர்வுத் துடுப்பாட்டம்

2004 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மே 6 அராரேயில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 19 ஓட்டங்களை எடுத்து மகரூஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 19பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 240 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

2018 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 11 , தாக்கவில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 194 பந்துகளில் 110ஓட்டங்களை எடுத்து மெகதி அசன் பிராசு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 167 பந்துகளில் 106 ஓட்டங்கள் எடுத்துஇறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 218 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4]

சான்றுகள்

  1. Campbell, Alistair (15 March 2015). "Alistair Campbell: Future of Zimbabwe cricketers lie in their hands". ICC-cricket.com. International Cricket Council. மூல முகவரியிலிருந்து 13 July 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 December 2017.
  2. "Brendan Taylor leaves Nottinghamshire and returns to Zimbabwe". Nottingham Post (14 September 2017). பார்த்த நாள் 15 September 2017.
  3. "Taylor ton goes in vain as Mehidy crushes Zimbabwe dreams". International Cricket Council. பார்த்த நாள் 15 November 2018.
  4. "இறுதிப் போட்டி".

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:ESPNcricinfo

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.