பிரெடரிக், வேல்சு இளவரசர்
பிரெடரிக் லூயி, வேல்சு இளவரசர் (Frederick Louis, Prince of Wales, 1 பெப்ரவரி 1707 – 31 மார்ச் 1751) என்பவர் 1727 முதல் தனது இறப்பு வரை பிரித்தானியாவின் முடிக்குரிய வாரிசாக இருந்தவர். [இவர் இரண்டாம் ஜோர்ஜ் மன்னருக்கும் அரசி கரோலைனிற்கும் பாசமுறிவுற்ற மூத்த மகனாவார். மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் தந்தையும் ஆவார்.
பிரெடரிக்கு | |
---|---|
வேல்சு இளவரசர் | |
![]() | |
பின்னையவர் | ஜார்ஜ், வேல்சு இளவரசர் |
வாழ்க்கைத் துணை | இளவரசி அகஸ்ட்டா |
வாரிசு | |
இளவரசி அகஸ்ட்டா,ஜார்ஜ் III, இளவரசர் எட்வர்டு, இளவரசி எலிசபெத், இளவரசர் வில்லியம் என்றி, இளவரசர் என்றி, இளவரசி லூசியா, இளவரசர் பிரடெரிக்கு, டென்மார்க்,நோர்வே அரசி கரோலின் மால்டில்டா | |
முழுப்பெயர் | |
பிரடெரிக் லூயி | |
குடும்பம் | அனோவர் மாளிகை |
தந்தை | ஜார்ஜ் II |
தாய் | கரோலைன் |
பிறப்பு | பெப்ரவரி 1, 1707 அனோவர், செருமனி |
இறப்பு | 31 மார்ச்சு 1751 44) லெஸ்டர் மாளிகை, இலண்டன், இங்கிலாந்து | (அகவை
அடக்கம் | 13 ஏப்ரல் 1751 வெஸ்ட்மின்ஸ்டர் மடம், இலண்டன், இங்கிலாந்து |
1701இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புரிந்துணர்வு சட்டப்படி பிரெடரிக் பிரித்தானிய அரியணைக்கு அடுத்த வாரிசாக வரிக்கப்பட்டார். தமது தந்தையின் முடியேற்பை அடுத்து செருமனியிலிருந்து பெரிய பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தார். வேல்சு இளவரசர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அப்பொறுப்பை ஏற்றார். ஆனால் தமது தந்தைக்கு முன்னரே இவர் உயிரிழந்ததால் அரசராக முடி சூடவில்லை. 1760 அக்டோபர் 25 இல் இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் மறைவிற்குப் பின்னர் பிரெடரிக்கின் மகனான மூன்றாம் ஜார்ஜ் அரசராக முடிசூடினார்.
துடுப்பாட்டம்
பிரெடரிக் இங்கிலாந்து வந்தடைந்தபோது துடுப்பாட்டம் புகழ் பெற துவங்கியிருந்தது. செருமானியரான பிரெடரிக் புதிய ஆங்கில சமூகத்தில் ஐக்கியப்பட துடுப்பாட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அக்காலத்தில் துடுப்பாட்டம் சூதாட்ட விளையாட்டாக இருந்தது. பல பந்தயங்களைக் கட்டியதுடன் விளையாட்டைப் புரக்கும் விதமாக தனது அணியையும் உருவாக்கினார்.
துடுப்பாட்ட பதிவுகளில் இவரைப் பற்றி முதன்முதலாகப் பதியப்பட்டது 1731இல் சர்ரே கௌன்ட்டி அணிக்கும் இலண்டன் அணிக்கும் இடையேயான போட்டியிலாகும்.[1]
மேற்சான்றுகள்
- H. T. Waghorn, The Dawn of Cricket, Electric Press, 1906.
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் இளவரசர் பிரடெரிக் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Unusual royal deaths at Ward's Book of Days
- Henry Churchyard "Royal Genealogies, Part 9"
- Sam Sloan "Big Combined Family Trees (pafg744)"
- Frederick Lewis, Prince of Wales at the National Portrait Gallery, London