பிரீட்ரிக் கையக்

பிரீட்ரிக் ஆகஸ்ட் வொன் கையக் (Friedrich August von Hayek, மே 8, 1899 - மார்ச் 23, 1992) ஒரு ஆஸ்திரிய - பிரித்தானிய நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர், அரசியல் மெய்யியல் சிந்தனையாளர். இவர் சமவுடைமை, பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு எதிராக தனிமனித சுதந்திரம், தாராண்மைவாதம், திறந்த சந்தை முதலாளித்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தினார். அரசானது அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிக்க வேண்டும் என்று இவர் கருதினார். கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்தில் ஆக்கத்திறன் மிக்க படைப்பாக்கம் இருக்காதென்று கூறினார்.

பிரீட்ரிக் கையக்
மேற்குலக மெய்யியல்
20-ம் நூற்றாண்டு மெய்யியல்
முழுப் பெயர்பிரீட்ரிக் ஆகுஸ்ட் வொன் கையக்
பிறப்புமே 8, 1899(1899-05-08)
வியென்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்புமார்ச்சு 23, 1992(1992-03-23) (அகவை 92)
பிரீபர்க், ஜெர்மனி
முக்கிய
ஆர்வங்கள்
பொருளியல், சமூக மெய்யியல், அரசியல் மெய்யியல், மனவியலின் மெய்யியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Economic calculation problem, Catallaxy, Extended order], Dispersed knowledge, Spontaneous order
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.