பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்)

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) எனவும் பிரின்சிப்பியா (Principia) எனவும் சுருக்கமாக அழைக்கப்படும் நூலானது ஐசாக் நியூட்டன் ஜூலை 5, 1687ல் வெளியிட்ட ஃவிலாசஃவி நாட்டுராலிஸ் பிரின்சிப்பியா மாத்த்டமாட்டிக்கா (Philosophiae Naturalis Principia Mathematica) என்னும் நூலாகும். இது மூன்று தொகுதிகளாக வெளிவந்தது. இதில் ஐசாக் நியூட்டனின் நகர்ச்சி பற்றிய விதிகளையும், அண்டம் எங்கும் இருக்கும் பொருள்களின் ஈர்ப்பு விசை பற்றியும், கோள்களின் பாதை நகர்ச்சி பற்றிய கெப்ளரின் விதிகளை கணித முறைப்படி இவர் தருவிக்கிறார்.

நியூட்டனின் புகழ் பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிகா எனும் நூல்

நுண்கணிதம் என்னும் முறையை இவர் வகுத்து இருந்தாலும், இவருடைய இந்த பிரின்சிப்பியா என்னும் நூலில் பெரும்பாலும் வடிவவியல் கணித முறைப்படியே கருத்துக்களை நிறுவியுள்ளார்.

வரலாற்றுப் பின்னணி

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் நில உலகமானது அண்டத்தின் நடுவாக இல்லாமல், கதிரவன் நடுவாக இருக்கும் கொள்கையை முன்வைத்தார். அதற்கு உறுதுணையான செய்திகளையும் கருத்துக்களையும் தன்னுடைய 1543ல் வெளியிட்ட டி ரெவலூசியோனிபஸ் ஆர்பியம் கோலேஸ்டியம் , De revolutionibus orbium coelestium, (விண்ணின் உருண்டைகள் சுழலுவது பற்றி) என்னும் நூலில் வெளியிட்டு இருந்தார். பின்னர் ஜோஹானஸ் கெப்ளர் Astronomia nova அஸ்ட்ரோனோமியா நோவா (புதிய வானியல்) என்னும் நூலை 1609ல் வெளியிட்டு இருந்தார். கெப்பளரின் செய்திகளின் படி கதிரவனைச் சுற்றிவரும் கோள்களானவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன எனவும், அதில் கதிரவன் ஒரு குவியத்தில் உள்ளது என்றும் கண்டுபிடித்து எழுதி இருந்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.