பிரிட்ஸ் லாங்
பிரடரிக் கிரிஸ்தின் அன்டன் பிரிட்ஸ் லாங் (Friedrich Christian Anton "Fritz" Lang) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் (டிசம்பர் 5, 1890 - ஆகஸ்ட் 2, 1976) ஒரு ஜெர்மன்-ஆஸ்திரிய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஜெர்மனியின் நடிப்பு பள்ளியில் பயின்ற இவர் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரி வெளியிட்ட "தி மாஸ்டர் ஆப் டார்க்னஸ்" என்ற படத்தை மொழிமாற்றம் செய்தார். அவரது மிகவும் பிரபலமான படங்களில் “ மெட்ரோபோலிஸ்” (உலகின் மிக செலவில் எடுக்கப்பட்ட பேசாத படம்) மற்றும் “எம்” ஆகியவை ஆகும்.
பிரிட்ஸ் லாங் | |
---|---|
![]() ’’ உமன் இன் மூன்’’ | |
பிறப்பு | பிரடரிக் கிரிஸ்தின் அன்டன் பிரிட்ஸ் லாங் திசம்பர் 5, 1890 வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | ஆகத்து 2, 1976 85) ’’பிவரி ஹில்ஸ்’’, அமெரிக்கா | (அகவை
பணி | திரைப்பட இயக்குனர், கதாசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1919–1960 |
வாழ்க்கைத் துணை | லிசா ரோசென்டால் (1919–1921) தே வான் ஹர்போ (1922–1933) லில்லி லாத்தே (1971–1976) |
இவர் ஆங்கில குற்ற மற்றும் பயங்கர கதைகளின் வகையான “நூய்ர்” வகை இருண்ட படங்களின் தந்தை என கருதப்படுகிறார். இவர் 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.