பிரான்டென்போர்க் வாயில்

பிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, German: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.

பிரான்டென்போர்க் வாயில்
Brandenburger Tor
பிரான்டென்போர்க் வாயில்
Location within central Berlin
பொதுவான தகவல்கள்
வகைநகர வாயில்
கட்டிடக்கலைப் பாணிபுதுச்செவ்வியல்
இடம்பேர்லின், செருமனி
ஆள்கூற்று52°30′58.58″N 13°22′39.80″E
கட்டுமான ஆரம்பம்1788
நிறைவுற்றது1791
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்கார்ல் கொட்காட் லன்கான்ஸ்

இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. 2ம் உலக யுத்தத்தின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.[1]

உசாத்துணை

  1. "Das Brandenburger Tor" (German). Die Stiftung Denkmalschutz Berlin. பார்த்த நாள் 2011-05-14.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.