பிரான்சு ஆன்னி கோர்தவா
பிரான்சு ஆன்னி தொமினிக் கோர்தவா (France Anne-Dominic Córdova) (பிறப்பு:ஆகத்து 5, 1947) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் தொழில்முனைவு ஆட்சியாளரும் ஆவார். இவர் தெசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநரும் ஆவார்.[1] முன்பு இவர் 2007 இல் இருந்து 2012 வரை பர்டியூ பல்கலைக்கழகத்தின் பதினொறாம் தலைவராக இருந்துள்ளார்.[2]
பிரான்சு ஆன்னி கோர்தவா France Anne Córdova | |
---|---|
![]() | |
14ஆவது தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு மார்ச்சு 2014 | |
முன்னவர் | கோரா பகுலே மாரெட் |
11ஆவது பர்டியூ பலகலைக்கழகத் தலைவர் | |
பதவியில் 2007–2012 | |
முன்னவர் | மார்ட்டின் சி. இசுச்கே |
பின்வந்தவர் | மிட்சு டேனியல்சு |
வேந்தர், இரிவர்சைடு கலிபோர்னியா பல்கலைக்கழகம் | |
பதவியில் 2002–2007 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 5, 1947 பாரீசு, பிரான்சு |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிறித்தியான் ஜே, பாசுட்டர் |
பிள்ளைகள் | 2 |
படித்த கல்வி நிறுவனங்கள் | சுட்டான்போர்டு பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் |
தொழில் | வானியற்பியலாளர் |
நிறுவனங்கள் | தேசிய அறிவியல் நிறுவனம் பர்டியூ பல்கலைக்கழகம் இரிவர்சைடு கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாந்தா பார்பாரா கலிபோர்னியா பல்கலைக்கழகம் பென்சில்வேனியா அரசு பல்கலைக்கழகம் இலாசூ அலமாசு தேசிய ஆய்வகம்] நாசா |
வாழ்க்கை
இளமை
இவர் பன்னிரு குழந்தைகளில் மூத்தவராகப் பிரான்சு நாட்டில் பாரீசில் பிறந்தார். இவரது தாயார் ஓர் அயர்லாந்து அமெரிக்கர். இவரது தந்தையார்மெக்சிகோ அமெரிக்கரும் அமெரிக்கப் படைத்துறைக் கல்விக்கழகத்துப் பட்டதாரியும் வணிகரும் ஆவார்.[3][4] இவர் கலிபோர்னியாவில் உள்ள இலா பியூயண்டே பேராயர் அமத் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவ்வூர் இலாசு ஏஞ்சலீசி நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது. பின்னர் சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கே இவர் ஆங்கிலத்தில் இளவல் பட்டம் பெற்ரார். பின்னர் மாந்தவியலில் ஓசாகாவில் உள்ள சாப்போதெக் இந்திய பியூப்ளோ மக்களைப் பற்றிக் களப்பணி ஆற்றினார். பிறகு இவர் 1978 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
வாழ்க்கைப்பணி
சொந்த வாழ்க்கை
இவர் அறிவியல் கல்வியாளராகிய கிறித்தியான் ஜே. பாசுட்டரை மண்ந்தார். இவர்களுக்குஆன்னி காத்தரைன், சுட்டீபன் என இரு குழந்தiயர் உண்டு.[5]
தகைமைகளும் விருதுகளும்
மேற்கோள்கள்
- Morello, Lauren (March 12, 2014). "US Senate approves France Córdova to lead NSF". Nature. பார்த்த நாள் March 18, 2014.
- Medaris, Kim (July 9, 2007). "Córdova to hold ice cream social July 16 on first day as Purdue president". Purdue News Service. பார்த்த நாள் 2008-11-22.
- "UC Riverside names system's first Latina chancellor". Black Issues in Higher Education (April 10, 2003). பார்த்த நாள் 2008-11-22.
- Frederick B. CORDOVA Jr., Obituary
- "Press release : CORDOVA NAMED NASA CHIEF SCIENTIST" (TXT). Nasa.gov. பார்த்த நாள் 14 January 2015.
வெளி இணைப்புகள்
- UC Riverside Chancellor France A. Córdova Named Purdue University President
- Purdue's new president 'out of this world'
- Gale - Free Resources - Hispanic Heritage - Biographies - France Anne Córdova
- France Córdova Video produced by Makers: Women Who Make America