பிரான்சிஸ்கோ பலக்டாஸ்

பிரான்சிஸ்கோ பலக்டாஸ் (Francisco Balagtas) (ஏப்ரல் 2, 1788 – பெப்ரவரி 20, 1862) பிரான்சிஸ்கோ பல்டசார் எனவும் அறியப்படுபவர், பிலிப்பினோ மொழியில் முன்னணி எழுத்தாளர் ஆவார். புளோரன்டே அட் லவுரா எனும் காப்பியத்தை இவர் எழுதினார். பிலிப்பினோ மொழி எழுத்தாளர்களுள் மாபெரும் எழுத்தாளராக இவர் கருதப்படுகின்றார். புளோரன்டே அட் லவுராவே இவருடைய மாபெரும் படைப்பாகக் கருதப்படுகின்றது. ஏப்ரல் 2, 1788 அன்று இவர் பிக்கா எனும் இடத்தில் பிறந்தார். யுவானா பலக்டாஸ் மற்றும் யுவானா டெலா குருஸ் ஆகியோர் இவரின் தாய் தந்தை ஆவார். இவர் கொலிஜியோ டி சென் ஜோஸ் எனும் கல்விச்சாலையில் தனது கல்வியை மேற்கொண்டார். 1862 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 73 ஆம் வயதில் இவர் இறந்தார்.

பிரான்சிஸ்கோ பலக்டாஸ் (Francisco Balagtas)

தொழில் கவஞர், எழுத்தாளர்
நாட்டுரிமை எசுப்பானியம்
கல்வி நிலையம் கொலிஜியோ டி சென் ஜோஸ் (தற்போது சன் ஜோஸ் செமினரி)
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
புளோரன்டே அட் லவுரா
துணைவர்(கள்) யுவானா டியாம்பெங்
பெற்றோர் யுவானா பலக்டாஸ்
யுவானா டெலா குருஸ்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.